இந்தியாவில் கல்வி மாநில உரிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் பின்னால் பல காரணங்கள் உள்ளன. கல்வியின் தன்மையை மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி, அதை மாநில அளவில் சிறப்பாக செயல்படுத்துவதற்கு இது வழிவகுக்கும். கல்வி ஒரு மாநில உரிமையாக இருப்பதால் பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப கல்விக் கொள்கைகளை வகுக்க முடியும். இரண்டாவதாக, மாநில அரசுகள் கல்வித் துறையில் உள்ளூர் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே அந்தந்த மாநிலத்தின் மாணவர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும், எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தங்கள் மாநிலத்தின் மாணவர்கள் அனைவரும் எவ்வித வேறுபாடும் பாகுபாடும் இன்றி கல்விக் கனவை எட்டிப்பிடிக்கும் வகையிலும் கொள்கைகள் திட்டங்கள் அனைத்தும் வகுக்க முடியும். அவர்களுக்கான அந்த உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும். உதாரணத்திற்கு தமிழகத்தில் 'நான் முதல்வன்' என்ற திட்டம் அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்களையும் சென்றடைந்து அவர்களை பயனுறச் செய்கிறது. இதன் மூலம் அவர்கள் மாநிலத்திலேயே, அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன.
ஒரு மாநிலத்தின் அரசு மட்டுமே அதன் மாணவர்களை தாயுள்ளம் கொண்டு காத்து வழி நடத்த இயலும். அதுபோல தமிழ்நாட்டில் குடியுரிமைப் பணிகளுக்கு முயற்சி செய்யும் மாணவர்களுக்கென பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன, இதனால் பல மாணவர்கள் பயனுற்று தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி சதவிகிதம் அதிகமுற்றது. பள்ளிக்கு கல்வியோ, உயர்கல்வியோ ஒவ்வொரு மாநிலமும் அவர்களின் வேலைவாய்ப்பு சூழல்கள், மாணவர்களின் திறனுக்கு ஏற்ப சரியான பாடத் திட்டததை வகுக்க இயலும்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான கல்வித் தேவைகள் மற்றும் சவால்கள் உள்ளன.
கல்வி மாநில உரிமையாக இருந்தால், மாநில அரசு, தனது மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி கொள்கைகளை வகுக்க முடியும். மாநிலத்தின் வளங்கள் மற்றும் நிதிகளை கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்தலாம். மாநில அரசு உயர்கல்வி நிறுவனங்
களை நிறுவலாம் மற்றும் மேம்படுத்தலாம். இதனால், மாணவர்களுக்கு உயர்கல்வி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அடிப்படை உரிமையான கல்வியை, ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
மாநிலத்தின் மொழி, கலாசாரம், பொருளாதாரம், சமூக சூழ்நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கல்வியை மாநிலத்திற்கு ஏற்றவாறு மாற்றி, பயிற்சி அளிப்பதன் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்கும். ஒவ்வொரு மாநிலமும், பிற மாநிலங்களுடன் போட்டியிட்டு தங்களது மாநிலம் சிறந்து விளங்க நினைப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு.
மாறாக ஒரே நாடு ஒரே கல்வி என்றகூறி, விருப்பமில்லா கல்வியை மாணவர்களின் மேல் திணிப்பதாக அமைந்துவிடும்.
இந்தியா பல்வேறு மொழிகள், கலாசாரங்கள் மற்றும் பொருளாதார நிலைகளைக் கொண்ட ஒரு நாடு. ஆகவே, கல்வித் துறையில் உள்ளூர் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு, பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் கல்விக் கொள்கைகளை வகுக்க முடியும்.
இந்திய அரசியலமைப்பு, கல்வியைப் பொது பட்டியலில் வைத்துள்ளதால், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு கல்வி தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் உள்ளது.
1976 ஆம் ஆண்டு 42ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது இந்திய அரசமைப்பின் ஒரு முக்கிய அம்சமாகும்.
சில மாநிலங்கள் கல்வியை மாநில உரிமையாக வைத்திருக்க விரும்புகின்றன. ஏனெனில், கல்வி என்பது மாநிலத்தின் மொழி, கலாசாரம், சமூக சூழ்நிலை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது. எனவே, மாநில அளவில் கல்வியைச் சிறப்பாகச் செயல்படுத்துவது அவசியம். மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக முடிவுகளை எடுக்க முடியும், இது கல்வித் துறைக்கு மிகவும் முக்கியமானது.
ஐரோப்பாவில் பல நாடுகள் உள்ளன, இருந்தாலும் ஒவ்வொரு நாடும் தன் சொந்த கல்வி முறையைப் பின்பற்றுகிறது இதனால் அவை வெற்றியும், வலிமையையும் கொண்ட நாடுகளாக திகழ்கின்றன.
இந்த காரணங்கள், கல்வியை மாநில உரிமையாக வைத்திருப்பதன் மூலம் மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப கல்விக் கொள்கைகளை வகுக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. 42ஆவது சட்டத்திருத்தம் என்பது மாநிலங்களுக்கு கல்வியில் அரசமைப்புச் சட்டம் கொடுத்த உரிமையை முழுக்க முழுக்க பறிப்பதாகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் உள்ளது. ஆகையால் விரைவில் கல்வி என்பது மாநில உரிமையாக மட்டுமே மாற்றப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் முழு உரிமை கொடுத்து இளைஞர்கள் சிறந்து விளங்க வழி செய்ய வேண்டும்.
Summary
Regarding the unique educational needs that would be met if the education department were included in the state list.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










