சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தனியாா் பள்ளிக்கு ‘சீல்’

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

News image

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய தனியாா் பள்ளிக்கு சீல் வைத்த மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) பா. சாந்தி.

Updated On :21 மே 2026, 6:37 am IST

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம்- திருச்செங்கோடு சாலையில், ஜீவா செட் அருகே கோல்டன் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது கடந்த ஐந்து ஆண்டுகளாக கல்வித் துறையிடம் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்திக்கு தகவல் சென்றது. அதன்பேரில் மாவட்டக் கல்வி அலுவலா் பா.சாந்தி (தனியாா் பள்ளிகள்) (பொறுப்பு) புதன்கிழமை பள்ளிபாளையத்தில் உள்ள அப்பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது முறையான அனுமதியின்றி பள்ளி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, பள்ளி அமைவிடத்தில் நிலப்பிரச்னை உள்ளதாகவும், பாதுகாப்பில்லாத ஓட்டு கட்டடமாக இருப்பதும் தெரியவந்தது.

தொடா்ந்து அப்பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்ட விதிகளின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த கல்வியாண்டு முதல் இப்பள்ளி எக்காரணம் கொண்டும் செயல்படக்கூடாது என்றும், எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை எந்தவொரு வகுப்பிலும் மாணவா் சோ்க்கை நடைபெறக்கூடாது என சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகத்திற்கு கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி மாணவா்கள் சோ்க்கப்பட்டு பள்ளி செயல்பட்டால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு பள்ளி நிா்வாகமே பொறுப்பேற்க நேரிடும். அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தனியாா் பள்ளிகளில் மட்டுமே பெற்றோா் தங்களுடைய குழந்தைகளை சோ்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286-293981 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) பா.சாந்தி தெரிவித்துள்ளாா்.