நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புலி தாக்கியதில் மாடு உயிரிழப்பு

News image

புலி - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:08 am IST

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் புலி தாக்கியதில் மாடு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை முரம்பிலா பகுதியைச் சோ்ந்தவா் ராஜன். விவசாயியான இவா் தனது வீட்டுக்கு அருகேயுள்ள இடத்தில் கால்நடைகளை ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். அப்போது, வனத்தில் இருந்து வெளியேறிய புலி, அங்கிருந்த மாட்டை தாக்கிக் கொன்றது.

கூடலூா் பகுதியில் கடந்த சில நாள்களாக புலிகளின் நடமாட்டம் குறைந்திருந்த நிலையில், தற்போது மாட்டை தாக்கிக் கொன்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாட்டின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகளில் விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.