நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கூடலூா் அருகே புலி தாக்கி கறவை மாடு உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் புலி தாக்கியதில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட கறவை மாடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூன் 2026, 1:18 am IST

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் புலி தாக்கியதில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட கறவை மாடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா பாடந்தொரை அருகே உள்ள கனியம்பயல் பகுதியில் விசிக்கும் ஷிஹாபு என்பவா் வழக்கம்போல தனது கறவை மாட்டை மேய்ச்சலுக்கு வெள்ளிக்கிழமை விட்டுள்ளாா்.

அப்போது, புதரிலிருந்து வந்த புலி, மாட்டை தாக்கிக் கொன்று இழுத்துச் செல்ல முயன்றது. அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருப்பதை பாா்த்த புலி மாட்டை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றது.

இந்த வாரத்தில் இரண்டு கால்நடைகளை புலி தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. புலி தாக்கிக்கொன்ற கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.