மேற்கு வங்கத்தில் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் 335 பேர், 11 தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 208 இடங்களில் வெற்றிபெற்று சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்ற நாள் முதல் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில், “கண்டறி, நீக்கு, நாடு கடத்து” என்ற திட்டமும் அடங்கும். இந்தத் திட்டத்தின்படி, மேற்கு வங்கத்தில் ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிந்து, பதிவேடுகளில் அவர்களின் பெயரை நீக்கி, நாடு கடத்தும் கொள்கையை அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இதுவரை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 11 தடுப்பு முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களை நாடு கடத்தும் வரை தற்காலிகமாகத் தங்க வைப்பதற்காக இந்த முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள இந்தத் தடுப்பு முகாம்களில் தற்போது மொத்தம் 335 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 148 பேர் ஆண்கள், 99 பேர் பெண்கள் மற்றும் 88 பேர் குழந்தைகள் ஆவர் எனத் தெரிவித்தனர்.
மேலும், வங்கதேசத்தை ஒட்டியுள்ள வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் பசிர்ஹாட் பகுதியில்தான், ஊடுருவல்காரர்கள் அதிகம் உள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் வங்க தேசத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.
Summary
335 individuals suspected of infiltrating West Bengal detained in camps!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










