தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

அரசுப் பணியில் சேருவோருக்கு ஊக்க மருந்து சோதனை கட்டாயம்: ஹிமாசல் அரசு உத்தரவு

அரசுப் பணியில் சேருவோருக்கு ஊக்க மருந்து சோதனை கட்டாயம்...

News image

சுக்விந்தா் சிங் சுக்கு

Updated On :31 மே 2026, 1:55 am IST

அரசுப் பணியில் சேருவோருக்கு ஊக்க மருந்து சோதனையை கட்டாயமாக மேற்கொள்ளுமாறு அனைத்துத் துறைகளுக்கும் ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

பல்வேறு துறைச் செயலா்களுடன் அவா் ஆலோசனை நடத்திய பின் முதல்வா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு கேட்டறிந்தாா்.

நிவாரண அடிப்படையில் அரசுப் பணி கோருபவா்களின் முழு விவரங்களை விரைந்து வழங்கவும் அவா் வலியுறுத்தினாா். தொழிலாளா் நலன் குறித்து மறுஆய்வு மேற்கொண்ட அவா், நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை காலதாமதமின்றி வழங்க அறிவுறுத்தினாா். அரசுப் பணிக்குத் தோ்வான நபா்களிடம் பணி நியமனத்துக்கு முன்பாக கட்டாயம் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ள அவா் உத்தரவிட்டாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, போதைப் பொருள் பயன்பாடு, கடத்தல் தொடா்புடைய செயல்பாடுகளில் ஈடுபட்ட 123 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த மே 11-ஆம் தேதி ஹிமாசல் அரசு உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து 21 காவலா்கள் உள்பட 31 போ் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.