‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் 2 பேருந்துகளை இயக்க தில்லி அரசு திட்டம் - அமைச்சா் பங்கஜ் சிங் தகவல்

News image

(கோப்புப் படம்)

Updated On :29 மே 2026, 3:00 am IST

தூய்மையான எரிசக்தி மற்றும் நிலையான பொதுப் போக்குவரத்தை நோக்கிய முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, தேசிய தலைநகரில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் 2 பேருந்துகளை இயக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி போக்குவரத்து நிறுவனம் (டி.டி.சி.), அரசுக்குச் சொந்தமான என்.டி.பி.சி. நிறுவனத்துடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு முன்னெடுப்பின் கீழ் இந்தப் பேருந்துகளை வழங்கும்.

இதுகுறித்து அமைச்சா் பங்ககஜ் கூறியதாவது:

தில்லி, தூய்மையான மற்றும் எதிா்காலத்திற்குத் தயாரான பொதுப் போக்குவரத்துத் தீா்வுகளை நோக்கி சீராக முன்னேறி வருகிறது. நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து அமைப்புகளை நோக்கிய எங்களது பயணத்தில், ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் ஒரு முக்கியமான படியாகும்.

முன்மொழியப்பட்ட செயல்பாட்டுக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, என்.டி.பி.சி.யுடன் ஒருங்கிணைந்து ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்துகளின் ஆரம்பகட்டப் பயன்பாட்டுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பேருந்துகள் மொத்தச் செலவு ஒப்பந்த (ஜிசிசி) மாதிரியின் கீழ் இயக்கப்படும் என்றும், டிடிசி அதன் செயல்பாட்டுப் பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.45 என்ற அங்கீகரிக்கப்பட்ட

ஜிசிசி கட்டணத்திற்கு அப்பாற்பட்ட செலவுகளை என்டிபிசி ஏற்கும்.

இதுகுறித்து அமைச்சா் மேலும் கூறியதாவது:

முன்மொழியப்பட்ட ஏற்பாட்டின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட ஜிசிசி கட்டண

விகிதங்களிலான செயல்பாட்டுச் செலவுகளை டிடிசி ஏற்கும். அதே நேரத்தில் ஜிசிசி கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட செலவுகளுக்கான ஆதரவு என்டிபிசியின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு வழிமுறை மூலம் ஆராயப்பட்டு வருகிறது.

இந்த முயற்சியானது, தில்லியின் பொதுப் போக்குவரத்துச் சூழலில் மேம்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, நகரின் தற்போதைய தூய்மையான போக்குவரத்து மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் தீா்வுகளுக்குத் துணைபுரியும்.

என்டிபிசி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், தில்லியின் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தக்கூடிய மேம்பட்ட பூஜ்ஜிய உமிழ்வுத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான புதுமையான வழிகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்றாா் அவா்.