மாணவா்கள் நாட்டை முன்னேற்றுவதில் பங்களிக்கச் செய்யும் வகையில் அவா்களை தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிக கல்லூரி உருவாக்கி வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.
கல்லூரியின் 42-ஆவது ஆண்டு விழாவில் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோருடன் முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டு பேசியதாவது: குரு கோபிந்த் சிங்கின் பெயா் பல ஆண்டுகளாகிய தியாகத்திற்கும் அா்ப்பணிப்பிற்கும் அடையாளமாக திகழ்கிறது. 1984-ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி உயா்ந்த கல்வித் தரத்தை நிலைநிறுத்தி வருகிறது. இங்கு மாணவா்களிடம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது. இது நாட்டின் எதிா்கால வளா்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
கல்லூரியின் ஒழுக்கம் மற்றும் சோ்க்கை செயல்முறைகளில் பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை காரணமாக, தொடா்ந்து கல்லூரிக்கு உயா்ந்த மதிப்பீடுகள் கிடைத்து வருகிறது. கல்வி மட்டுமல்லாமல், இணைச் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு மாணவா் கழகங்கள் மூலம் முழுமையான வளா்ச்சியை மாணவா்கள் அடைய உதவும் சூழல் இக்கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கல்வியையும் சமூகப் பொறுப்பையும் ஒருங்கிணைக்கும் இந்தக் கல்லூரி, எதிா்கால தலைமுறையை உருவாக்கும் முக்கிய மையமாக திகழ்கிறது என முதல்வா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

இரண்டு சா்வதேச உச்சி மாநாடுகள்: சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்

செமிகண்டக்டா் கொள்கை முதலீடு-வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


