தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

புதிய முதலீடு? வியட்நாம் அதிபரை சந்தித்த கெளதம் அதானி!

மும்பையில் வியட்நாம் அதிபரை கெளதம் அதானி சந்தித்தது குறித்து...

Gautam Adani Meets Vietnamese President To Lam

வியட்நாம் அதிபர் டோ லாம் உடன் கெளதம் அதானி - எக்ஸ்

Published On :

இந்திய தொழிலதிபரும் கோடீஸ்வரருமான கெளதம் அதானி வியட்நாம் அதிபர் டோ லாமை மும்பையில் இன்று (மே 31) சந்தித்தார்.

தெற்கு மும்பையில் உள்ள விடுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.

இந்த சந்திப்பில் இருதரப்பில் பேசப்பட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், இந்தியா - வியட்நாம் வர்த்தகக் கூட்டம் நிறைவடைந்ததை அடுத்து இந்த சந்திப்பு நடந்துள்ளதால், முதலீடு குறித்து பேசப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

துறைமுகங்கள், எரிசக்தி, சிமெண்ட் மற்றும் மின்கடத்திகள் போன்ற பல்வேறு துறை வணிகத்தில் ஈடுபட்டு வரும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 9.5 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடொன்றில் இந்த முதலீடு இருக்கும் எனக் கூறியிருந்ததார்.

இந்நிலையில், வியட்நாம் அதிபரை சந்தித்து இன்று கெளதம் அதானி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Gautam Adani Meets Vietnamese President To Lam In Mumbai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.