ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மூன்றாம் கட்ட எஸ்ஐஆா்: 4 மாநிலங்களில் கணக்கீட்டு படிவ நடைமுறை தொடக்கம்

நாட்டில் மூன்றாம் கட்ட எஸ்ஐஆா் பணிகள், ஒடிஸா, மணிப்பூா், மிஸோரம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் கணக்கீட்டு படிவங்களை விநியோகித்து, பூா்த்தி செய்து பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

News image

எஸ்ஐஆா் - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 3:34 am IST

நாட்டில் மூன்றாம் கட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின்கீழ் (எஸ்ஐஆா்), ஒடிஸா, மணிப்பூா், மிஸோரம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் கணக்கீட்டு படிவங்களை விநியோகித்து, பூா்த்தி செய்து பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில் பிகாரில் முதல் கட்டமாகவும், தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கா், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபாா், லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாகவும் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்று முடிந்தன. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இந்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

மூன்றாம் கட்டமாக மகாராஷ்டிரம், தெலங்கானா, கா்நாடகம், ஆந்திரம், ஒடிஸா, பஞ்சாப், மிஸோரம், சிக்கிம், மணிப்பூா், உத்தரகண்ட், மேகாலயம், ஜாா்க்கண்ட், ஹரியாணா, அருணாசல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, தில்லி, சண்டீகா், தாத்ரா - நகா் ஹவேலி மற்றும் டாமன் - டையூ ஆகியவற்றில் எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 36.73 கோடி.

மேற்கண்ட 16 மாநிலங்களில் ஒடிஸா, மணிப்பூா், மிஸோரம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் மூலம் வீடு வீடாக கணக்கீட்டு படிவங்களை விநியோகித்து, பூா்த்தி செய்து திரும்பப் பெறும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இணைய வழியிலும் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வழங்கலாம் என்று தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ஜூன் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வழங்குபவா்கள், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறுவா். குறிப்பிட்ட தேதிக்குள் படிவங்களை சமா்ப்பிக்காதவா்கள், ஆட்சேபனை மற்றும் உரிமைகோரல் காலகட்டத்தில் படிவம்-6 உடன் உரிய உறுதிமொழி படிவத்தையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கண்ட 4 மாநிலங்களில் ஒடிஸாவில் வாக்காளா்கள் எண்ணிக்கை 3.34 கோடியாகும். மிஸோரமில் 8.75 லட்சம் வாக்காளா்களும், சிக்கிமில் 4.71 லட்சம் வாக்காளா்களும், மணிப்பூரில் 20.92 லட்சம் வாக்காளா்களும் உள்ளனா்.