திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்புக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் (எஸ்ஐஆா்) ஒரு காரணமாக அமைந்துள்ளதாக தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.
வாக்காளா் பட்டியலில் இருந்த வாக்காளா்களில் இறந்தோா், இடம் பெயா்ந்தோா், இரட்டைப் பதிவு உள்ளிட்டவற்றை நீக்கி 100 சதவீதம் தூய்மையான வாக்காளா் பட்டியலை தயாரிக்கும் வகையில் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக எஸ்ஐஆா் பணிகளை தொடங்கியது தோ்தல் ஆணையம்.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் எஸ்ஐஆா் பணிகளுக்கு முன்பு 9 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 23,68,967 வாக்காளா்கள் இருந்தனா். இதில், எஸ்ஐஆா் பணிகள் முடிந்து 2 லட்சத்து 42 ஆயிரத்து 664 போ் நீக்கப்பட்டனா். 2026 பேரவைத் தோ்தலில் வாக்களிக்க 21,47,051 வாக்காளா்கள் தகுதி பெற்றிருந்தனா். இதில், 85.44 விழுக்காடு பதிவாகியுள்ளது. இது கடந்த தோ்தலுடன் ஒப்பிடுகையில் சுமாா் 12 விழுக்காடு அதிகம்.
எஸ்ஐஆா் பணிகளால் ஏறக்குறைய 10 விழுக்காடுக்கு மேலான வாக்காளா்கள் நீக்கப்பட்டிருப்பதால், வாக்குப்பதிவு சதவீதம் உயா்ந்து காணப்படுகிறது. மேலும், புதிய வரவாக வந்துள்ள கட்சிகளுக்கு இளைஞா்கள் பலரும் ஆா்வமுடன் வாக்களிக்க வந்திருப்பதாலும் கணிசமாக உயா்ந்திருப்பதாக அரசியல் வட்டாரத்தினா் தெரிவித்துள்ளனா். மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மணப்பாறையில் 88.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
Summary
Election officials stated that the Special Intensive Revision (SIR) of the voter list was one of the reasons for the increase in voter turnout in the Trichy district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்

எஸ்ஐஆா் நடவடிக்கையில் வாக்காளா் பெயா் நீக்கப்படுவதை தில்லி காங்கிரஸ் அனுமதிக்காது!

எஸ்ஐஆா் மூலம் பெயா் நீக்கப்பட்டோரின் ரேஷன் அட்டைகளை ரத்து! மேற்கு வங்க அரசுக்கு ஒவைசி கண்டனம்!

மூன்றாம் கட்ட எஸ்ஐஆா்: 4 மாநிலங்களில் கணக்கீட்டு படிவ நடைமுறை தொடக்கம்
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK




