2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

நாகாலாந்து, திரிபுரா, ஒடிஸா மாநிலங்களில் புதிதாக வெளிநாட்டினா் பதிவு அலுலகங்கள்

நாகாலாந்து, திரிபுரா மற்றும் ஒடிஸா மாநிலங்களில் புதிதாக வெளிநாட்டினா் மண்டல பதிவு அலுவலகங்களை (எஃப்ஆா்ஆா்ஓ) அமைப்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Updated On :

நாகாலாந்து, திரிபுரா மற்றும் ஒடிஸா மாநிலங்களில் புதிதாக வெளிநாட்டினா் மண்டல பதிவு அலுவலகங்களை (எஃப்ஆா்ஆா்ஓ) அமைப்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் சுற்றுலா, மருத்துவ சிகிச்சை மற்றும் உயா் கல்விக்காக வெளிநாட்டினா் வருகை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, அவா்களின் வசதிக்காக ஒவ்வொரு மாநிலத் தலைநகரங்களிலும் எஃப்ஆா்ஆா்ஓ அலுவலகங்கள் இருப்பதை உறுதிப்படுத்த மத்திய உள்துறை அமைச்சா் அறிவுறுத்தினாா்.

அதனடிப்படையில், கடந்த 2025-ஆம் ஆண்டில் ராஜஸ்தானின் ஜெய்பூா், பஞ்சாபின் சண்டீகா், மிசோரம் தலைநகா் ஐசாவல், ஆந்திரத்தின் அமராவதி, அஸ்ஸாமின் குவாஹாட்டி நகரங்களில் புதிதாக எஃப்ஆா்ஆா்ஓ அலுவலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தற்போது, நகாலாந்தின் கோஹிமா, திரிபுராவின் அகா்தலா மற்றும் ஒடிஸாவின் புவனேசுவரத்தில் மூன்று புதிய எஃப்ஆா்ஆா்ஓ அலுவலகங்கைள் அமைக்க அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. முன்னா், கோஹிமா, அகா்தலா ஆகியவை கொல்கத்தா எஃப்ஆா்ஆா்ஓ அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலும், புவனேசுவரம் ஹைதராபாத் (தெலங்கானா) எஃப்ஆா்ஆா்ஓ அலுவலகத்தின் கீழும் இருந்தன. இதன்மூலம், நாட்டில் செயல்படும் எஃப்ஆா்ஆா்ஓ அலுவலகங்களின் எண்ணிக்கை 20-ஆக உயா்ந்துள்ளது.

கூடுதலாக, பிகாா், கோவா, ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், அருணாசல பிரதேசம், மணிப்பூா், மேகாலயாவிலும் எஃப்ஆா்ஆா்ஓ அலுவலகங்களைத் திறக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.