முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

அரசு வேலையைத் தாண்டி இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்! நாகாலாந்து ஆளுநர்!

அரசு வேலைவாய்ப்பைத் தாண்டி புதிய துறைகளில் தங்களை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்...

Nand Kishore Yadav as Nagaland

நாகாலாந்து ஆளுநர் நத்த் கிஷோர் யாதவ் - file photo

Published On :

அரசு வேலைவாய்ப்பைத் தாண்டி இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நாகாலாந்து ஆளுநர் நத்த் கிஷோர் யாதவ் வலியுறுத்தினார்.

இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞர் விழாவில் யாதவ் பங்கேற்றுப் பேசினார்.

அரசு வேலைவாய்ப்பு மட்டும் ஒவ்வொரு இளைஞரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்துவிட முடியாது. நாம் வெவ்வேறு பாதைகளில் வாய்ப்புகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

திறன், உறுதிப்பாடு, விடாமுயற்சி மற்றும் தொழில்முனைவு மனப்பான்மை ஆகியவற்றைக் கொண்டு, நமது இளைஞர்கள் சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதோடு, சுயச்சார்பு நாகாலாந்தை உருவாக்கவும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை அளிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அறி, நடைமுறைத் திறன்கள், ஒழுக்கம், தொடர் கற்றல் ஆகியவற்றின் மூலம் திறமைகளுக்கு வலுசேர்க்க வேண்டும், டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில்முனைவு, விவசாயம், சுற்றுலா, கைவினைப்பொருள்கள், ஆக்கப்பூர்வமான தொழில்கள் மற்றும் பிற வளர்ந்துவரும் துறைகளை ஆகியவற்றை இளைஞர்கள் ஆராய வேண்டும்.

இன்று நாம் பெறப்படும் ஒரு திறன் வாழ்நாள் முழுமைக்குமான சொத்தான மாறி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

வகுப்பறைகளில் மட்டுமல்லாமல், பயிற்சி, அனுபவம், வழிகாட்டுதல் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமும் திறன்கள் பெறப்படுகின்றன.

நாகாலாந்தின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, பாரம்பரிய கலை வடிவங்களை புதிய வழிகளில் வெளிப்படுத்த இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.