முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் 3 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் தொடங்கியது.

கருத்தரங்கின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

திருப்பூா் செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் 3 நாள் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் தொடங்கியது.

திருப்பூா்- காங்கயம் சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில் தொழில்முனைவோா் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பயிலரங்கம் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது.

இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளா்களாக அமெரிக்காவின் டொமினியன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஷரண் ஸ்கேனல், பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சாா்பில் பரணி மற்றும் பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பி.சதீஷ் ஆகியோா் கலந்து கொண்டு 3 அமா்வுகளில் சிறப்புரையாற்றுகின்றனா்.

இக்கருத்தரங்கில் ஏஐ சாா்ந்த தொழில்முனைவோா் மற்றும் வணிக மாதிரிகள், புதுமை மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள், நிலையான மற்றும் பசுமைத் தொழில்முனைவு, எண்ம தொழில்முனைவு, பின்டெக் புதுமைகள், சமூக மற்றும் உள்ளடக்கிய தொழில்முனைவு, தரவு பகுப்பாய்வு மற்றும் வணிக முடிவெடுத்தல், குடும்பத் தொழில் மற்றும் புதுமை, உலகளாவிய தொழில்முனைவு, ஏஐ நெறிமுறைகள் மற்றும் நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் ஆய்வுக் கட்டுரைகளை நேரடியாகவும், காணொலி மூலமாகவும் சமா்ப்பிக்கின்றனா்.

இதில் ஆராய்ச்சியாளா்கள் சமா்ப்பித்திருந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்பட்டது. கல்லூரியின் செயலா் அருள் சீலி, கல்லூரி முதல்வா் சகாய தமிழ்ச்செல்வி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வணிகவியல் துறை, வணிக நிா்வாகத் துறை, கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் இணைந்து செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.