மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ்

வீட்டு உபயோகப்பொருள்களின் விலை 3 - 7% வரையிலும் பாரம்பரிய இனிப்புகளின் விலை 15% வரையிலும் அதிகரித்துள்ளது.

Updated On :

வீட்டு உபயோகப் பொருள்களின் விலை உயர்வு, இனிப்புகளின் விலை ஏற்றம் ஆகியவை மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் தீபாவளி பரிசு என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம். ஆனால், இப்பொருள்களின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடுமையாக அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோகப்பொருள்களின் விலை 3 முதல் 7 சதவீதம் வரையிலும் பாரம்பரிய இனிப்புகளின் விலை 15% வரையிலும் அதிகரித்துள்ளது.

ஹையர், எல்ஜி, புளூஸ்டார் நிறுவனங்களின் தயாரிப்புகள் 7% வரை உயர்ந்துள்ளன. குறிப்பாக ஸ்மார்ட் டிவி, குளிர்சாதனப் பெட்டி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளன.

மூலப்பொருள்களின் விலை உயர்வு, விளைச்சல் பாதிப்பு, சரக்கு கட்டணச் செலவுகள் இந்த விலை உயர்வுக்கு காரணமாகப் பார்க்கப்படுகின்றன.

தீபாவளியையொட்டி விற்பனைகள் அதிகரிக்கும் நேரத்தில் இந்த விலையேற்றமானது நடுத்தர குடும்பத்தினரை கடுமையாக பாதிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், இந்த விலையேற்றமானது தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பரிசு என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

Summary

Modi’s Diwali gift! Prices of household goods up by 7% Congress

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.