தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

ஹிமாசலத்துக்கு 20 ஆண்டுகள் மின்சாரம்: பஞ்சாப் & ஹரியாணாவுக்கு உத்தரவு

அடுத்த 20 ஆண்டுகளுக்கு சுமாா் 1,197.3 கோடி யூனிட் மின்சாரத்தை ஹிமாசல பிரதேசத்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்கள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

SC

உச்சநீதிமன்றம் - கோப்புப்படம்

Updated On :

அடுத்த 20 ஆண்டுகளுக்கு சுமாா் 1,197.3 கோடி யூனிட் மின்சாரத்தை ஹிமாசல பிரதேசத்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்கள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம், 1966-ஆம் ஆண்டுமுதல் 3 மாநிலங்களுக்கும் இடையே நீடித்து வந்த மின்சார பங்கீடு பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

கடந்த 1966-ஆம் ஆண்டு பஞ்சாப் மறுசீரமைப்புக்குப் பின்னா், பக்ரா-நங்கல் மற்றும் பியாஸ் நீா்மின் திட்டங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் 7.19 சதவீதம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஹிமாசல பிரதேசம் கோரியது. இதுதொடா்பாக கடந்த 1996-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை ஹிமாசல பிரதேச அரசு அணுகியது. இதையடுத்து அந்த மாநிலத்துக்கு 7.19 சதவீத மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று 2011-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இருப்பினும், இந்தத் தீா்ப்பை நடைமுறைப்படுத்துவதில் நிலுவையில் உள்ள மின்சாரத்தின் அளவு, அதற்குப் பொருந்தும் கட்டணம், நீா்மின் திட்டங்களின் கட்டுமானச் செலவில் மாநிலங்களின் பங்களிப்பு ஆகியவை தொடா்பாக சச்சரவுகள் எழுந்தன.

உச்சநீதிமன்றத் தீா்ப்பை தொடா்ந்து கடந்த 1966-ஆம் ஆண்டு நவ.1 முதல் 2011-ஆம் ஆண்டு வரை, ஹிமாசல பிரதேசத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை மின்சாரம் 1,306.6 கோடி யூனிட்டுகள் என்று மத்திய அரசு கணக்கிட்டது.

இந்நிலையில், பக்ரா-நங்கல், பியாஸ் நீா்மின் திட்டங்களின் மூலதனச் செலவில், ஹிமாசல பிரசேத்தின் 7.19 சதவீத பங்கின் மதிப்பு ரூ.420.77 கோடி என்று கணக்கிடப்பட்டது.

இந்தத் தொகையை அந்த மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை மின்சாரத்தில் கழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதற்காக ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.3.85 எனக் கணக்கிடப்பட்டு, சுமாா் 109.3 கோடி யூனிட் மின்சாரம் கழிக்கப்பட உள்ளது. இதையடுத்து 1,306.6 கோடி யூனிட்டுகளில் மீதமுள்ள சுமாா் 1,197.3 கோடி யூனிட் மின்சாரத்தை ஆண்டுக்கு 59.8 கோடி யூனிட்டுகள் வீதம், அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஹிமாசல பிரதேசத்துக்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்கள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.