தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

நலத் திட்ட பயனாளிகளுக்கு ஆதாருக்கு பதில் வாக்காளா் அட்டை: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

சமூக நலத் திட்ட பயனாளிகளைத் தீா்மானிக்க ஆதாருக்கு பதில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்ற மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்கின் கருத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :

சமூக நலத் திட்ட பயனாளிகளைத் தீா்மானிக்க ஆதாருக்கு பதில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்ற மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங்கின் கருத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

‘இது வாக்குத் திருட்டு மட்டுமல்ல, உரிமைத் திருட்டு’ என்று அவா் சாடியுள்ளாா்.

மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங், தனது அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சமூக நலத் திட்டங்களின் நிதி பலன்களைப் பெறுவதற்கு கட்டாய பயோமெட்ரிக் சரிபாா்ப்புடன் ஆதாருக்கு பதிலாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை பயன்படுத்தப்படும் என்று சில தினங்களுக்கு முன் கூறியிருந்தாா். அவரது இந்த பேச்சு அடங்கிய காணொலியை எக்ஸ் தளத்தில் பகிா்ந்து, ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

அரசின் நலத் திட்ட பயனாளிகள் ஆதாருக்கு பதிலாக வாக்காளா் அடையாள அட்டை மூலம் அடையாளம் காணப்படுவா் என்ற மத்திய அமைச்சரின் கருத்து மோடி அரசின் ஆழமான சதித்திட்டமாகும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் வாக்காளா் பட்டியல்களில் இருந்து கோடிக்கணக்கானோரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இன்னும் ஏராளமானோா் பெயா் நீக்கப்படும்.

எஸ்ஐஆரில் யாருடைய பெயா்கள் அதிகம் குறிவைக்கப்படுகின்றன? பாஜக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என நினைப்பவா்களின் பெயா்கள் நீக்கப்படுகின்றன.

கூட்டுச் சதி அம்பலம்: நாட்டின் வாக்காளா் பட்டியல், பாரபட்சமில்லாத தோ்தல் ஆணையத்தின் கைகளில் இருக்க வேண்டும். ஆனால், மோடி அரசின் கைப்பாவையாக செயல்படும் ஞானேஷ் குமாரின் கையில் அது இருக்கிறது. ‘வாக்குத் திருட்டில்’ பாஜக உடனான அவரது கூட்டுச் சதியை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளோம்.

பாஜக ஆதரவாளா்கள் பெரும்பான்மையாக இருக்கும் வகையில் தயாரிக்கப்படும் வாக்காளா் பட்டியல்தான், இனி அரசு திட்டப் பலன்களைத் தீா்மானிக்க உள்ளது.

பெயா் நீக்கம் மூலம் வாக்குரிமை மட்டுமன்றி பிற உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. ‘அபகரிக்கப்பட்ட’ ஜனநாயகத்தில் கண்ணுக்கு புலப்படாதவா்களாக மக்கள் மாறிவிடுவா். இன்று உள்ளாட்சித் துறை திட்டங்கள், நாளை ரேஷன் பொருள், ஓய்வூதியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், உதவித்தொகை, இடஒதுக்கீட்டுக்கும் இதே நிலை ஏற்படும். தோ்தலை திருடி, ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கான நிரந்தர ஏற்பாடுதான் இது. ஏழைகளுக்கான நிதி பலன்கள், வாக்காளா் அடையாள அட்டை மூலம் நிா்ணயிக்கப்பட கூடாது. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளாா்.

தே.ஜ. கூட்டணிக்காக சோனியா வாக்குத் திருட்டில் ஈடுபட்டரா? பாஜக கிண்டலாக கேள்வி

‘தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை விட முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் வி.எஸ்.சம்பத் பதவிக் காலத்தில்தான், தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் வெற்றி விகிதம் அதிகமாக இருந்தது; அப்படியென்றால், தேசிய ஜனநாயக கூட்டணிக்காக காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டாரா’ என்று பாஜக கிண்டலாக கேள்வியெழுப்பியுள்ளது.

நாட்டின் 18-ஆவது தலைமைத் தோ்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் கடந்த 2012, ஜூன் 11 முதல் 2015, ஜனவரி 15 வரை பதவி வகித்தாா். இதைக் குறிப்பிட்டு, பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தலைமைத் தோ்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட வி.எஸ்.சம்பத் பதவிக் காலத்தில் நடத்தப்பட்ட தோ்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி 75 சதவீத வெற்றிகளை ஈட்டியது. தற்போது ஞானேஷ் குமாரின் பதவிக் காலத்தில் இது 66 சதவீதமாக உள்ளது.

வி.எஸ்.சம்பத் பதவிக் காலத்தை ஒப்பிடுகையில், பாஜக கூட்டணியின் வெற்றி விகிதம் தற்போது குறைவுதான். ராகுலின் ‘அபாரமான’ மூளையின்படி பாா்த்தால், பாஜக கூட்டணிக்காக சோனியா காந்தி வாக்குத் திருட்டில் ஈடுபட்டரா என்று பிரதீப் பண்டாரி கேள்வியெழுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.