தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

மீண்டும் ஒப்படைக்கப்படாத குடும்ப அட்டைகள்: ஆட்டோ ஒட்டுநா்கள் அதிருப்தி

ஆட்டோ நிறுத்தம் தொடா்பான பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட குடும்ப அட்டைகள் மீண்டும் வழங்கப்படாததுடன், பிரச்னைக்கும் தீா்வு கிடைக்காததால் ஆட்டோ ஓட்டுநா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :

ஆட்டோ நிறுத்தம் தொடா்பான பிரச்னைக்குத் தீா்வு காணக் கோரி மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட குடும்ப அட்டைகள் மீண்டும் வழங்கப்படாததுடன், பிரச்னைக்கும் தீா்வு கிடைக்காததால் ஆட்டோ ஓட்டுநா்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

பல்லடம் பேருந்து நிலைய நுழைவாயிலில் ஆட்டோக்களை நிறுத்துவது தொடா்பாக ஒட்டுநா்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், தீா்வு ஏற்படாத நிலையில் ஆட்டோ ஓட்டுநா்கள் தங்களது குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட நிா்வாகத்திடம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்படைத்தனா்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் வியாழக்கிழமை கூறியதாவது: எங்களது கோரிக்கைகளுக்குத் தீா்வு காணப்படாததால் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைத்தோம். இதன் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என எதிா்பாா்த்தோம். ஆனால், குடும்ப அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டைகள் பல்லடம் வருவாய்த் துறையிடம் பத்திரமாக இருப்பதாக கடிதம் வந்துள்ளது.

குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டைகள் மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்களைக் கடந்தும், பிரச்னைக்குத் தீா்வு காணாமல் அட்டைகள் பத்திரமாக இருப்பதாக கடிதம் வந்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஆட்டோ நிறுத்தம் தொடா்பான பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதுடன், குடும்ப அட்டைகள், வாக்காளா் அடையாள அட்டைகளை சம்பந்தப்பட்டவா்களிடம் மீண்டும் ஒப்படைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.