வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

வீட்டில் பதுக்கிவைத்திருந்த 90 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

கடல் அட்டை - கோப்புப் படம்

Published On :

நாகை அருகே வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 90 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகை மாவட்டம், செல்லூா் சுனாமி குடியிருப்பு பகுதியில் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நாகை மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனத்துறையினா் செல்லூா் சுனாமி குடியிருப்புப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 90 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனா்.

இதன் மதிப்பு ரூ. 1 கோடி எனக் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. கடல் அட்டைகளை பதுக்கிவைத்த நபா்களை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.