தீபாவளி விடுமுறை எதிரொலி: நாளை சென்னை மெட்ரோவில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை!தீபாவளி விடுமுறை: நாளை (நவ. 9) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை! பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்!மேக்கேதாட்டு அணை: யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை: விஜய்க்கு கர்நாடக முதல்வர் பதில்!

தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியா; காற்றின் தரம் 'மிகவும் மோசம்'

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருவது தொடர்பாக...

Updated On :

புது தில்லி: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தில்லியில் பட்டாசு புகைகளால் ஞாாயிற்றுக்கிழமை காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் தொடர்கிறது.

பல நாள்களாக நீடித்த பரபரப்பான சூழல் மற்றும் ஷாப்பிங்கிற்குப் பிறகு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகள் கடைகளில் மின்விளக்குகளால் அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றியும் வழிபட்டனர். வழக்கம்போல பட்டாசுகள் வெடிக்கப்பட்டு பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டதில் தில்லியில் ஞாாயிற்றுக்கிழமை காற்றின் தரம் 'மிகவும் மோசம்' பிரிவில் தொடர்கிறது.

எல்.கே. அத்வானிக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

100-வது வயதில் அடி எடுத்து வைத்துள்ள முன்னாள் துணைப் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நாளை குஜராத்தில் ரூ.1,024 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ரூ. 1,024 கோடி மதிப்பிலான 27 வளர்ச்சித் திட்டங்களைத் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்; மேலும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என்று மேயர் ஹிதேஷ் பாரோட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கர்நாடகாவில் 67 இடங்களில் பெட்ரோல் மாதிரிகள் பரிசோதனை

பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரித்ததால் வாகனங்களின் இன்ஜின் செயல்பாடு பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கர்நாடகா முழுவதும் 67 இடங்களில் பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேக்கேதாட்டு திட்டம்: தமிழகத்தின் ஒத்துழைப்பைக் கோரும் டி.கே. சிவகுமார்

மேக்கேதாட்டு சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தமிழகத்தின் ஒத்துழைப்பைக் கோரியுள்ள கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், இந்த திட்டத்தால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தை பலி

தீபாவளி பண்டிகையின் போது, ​​தமிழகத்தில் பட்டாசு விபத்துகளால் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும்; மேலும் 269 பேர் தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருவதாக கடந்த 24 மணி நேர அவசரக்கால தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆயில் இந்தியா: தீ விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு; 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, தீ விபத்து நடத்த இடத்தில் பொறுப்பில் இருந்த நான்கு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காசியாபாத் காவல் சோதனைச் சாவடி வெடி விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டம், இந்திராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசந்தாரா காவல் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த வெடி விபத்து தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு "தெஹ்ரிக் உல் முஜாஹிதீன்" என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வெடி விபத்தில் சோதனைச் சாவடி ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட காளி பூஜை

மேற்கு வங்கம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காளி பூஜை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காளி பூஜையை காண கோயில்களில் ஆயிரக்காண பக்தர்கள் கூடினர். கோயில் அலங்காரப் பந்தல்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது; குடியிருப்புப் பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.

தீபாவளி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள்

தீபாவளியை முன்னிட்டு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசி மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள், தீபாவளியைக் கொண்டாடும் மக்களுக்கு அமைதி, செழிப்பு மற்றும் ஒற்றுமை உணர்வு மேலோங்கட்டும் என தங்கள் வாழ்த்துகளில் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தீபாவளி

நேபாளம் முழுவதும் உள்ள இந்துக்கள், ஐந்து நாள்கள் நடைபெறும் 'திஹார்' பண்டிகையின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடினர். செல்வத்திற்கும் செழிப்புக்கும் அதிபதியான லட்சுமி தேவியை வழிபட்ட அவர்கள், தங்கள் வீடுகளை மின் விளக்குகளால் அலங்கரித்து, விளக்கேற்றியும் வழிபட்டனர்.

India revels in Diwali celebrations; crackers contribute to 'very poor' Delhi air

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.