ஜம்முவில் துப்பாக்கியுடன் திரிந்த ஒருவர் கைது
ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
ஜம்முவில் துப்பாக்கியுடன் திரிந்த ஒருவர் கைது - பிரதிப் படம்
ஜம்மு: ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
ஜம்மு மாவட்டம் மீரான் சாஹிப் பகுதியில் உள்ள லாங்கோடியாவைச் சேர்ந்த ஆசிஃப் அலி சௌத்ரி என்பவர், ஞாயிற்றுக்கிழமை இரவு பிஷ்னா பகுதியில் துப்பாக்கி, மேகசின் மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிஷ்னா போலீசார், அவரை கைது செய்து, அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
அவரிடம் துப்பாக்கி எங்கிருந்து வந்தது, இது எதற்காகப் பயன்படுத்தப்பட இருந்தது மற்றும் இதில் ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக பிஷ்னா காவல் நிலைய போலீசார், ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜம்முவில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டவும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஜம்மு காவல்துறை உறுதியுடன் செயல்படுவதாக அவர் கூறினார்.
A man was arrested with a pistol in the outskirts of Jammu, police said on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


