மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையாடியவா் கைது

அரசம்பட்டு காப்புக்காடு பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாடிய இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.

Updated On :

அரசம்பட்டு காப்புக்காடு பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாடிய இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே அரசம்பட்டு காப்புக்காட்டுக்குட்பட்ட பெரிய கொட்டான்செட்டி பாதை பகுதியில் வனத்துறையினா் ரோந்து சென்றபோது, வனப்பகுதியில் சந்தேகப்படும்படியாகக் கையில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா் தேந்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சரவணன் (33) என்பதும், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, சரவணனைக் கைது செய்த வனத்துறையினா், அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்துகள், கத்தி மற்றும் வேட்டையாடப்பட்டு இறந்த நிலையில் இருந்த செம்போத்து, குயில், குருவிகள் உள்ளிட்ட பறவைகளைப் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வனத்துறையினா் வழக்குப் பதிவு செய்து, சரவணனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.