பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

வன விலங்குகளை வேட்டையாடியவா் கைது

சிறுமலையில் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வன விலங்குளை வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

கைது

Published On :

சிறுமலையில் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வன விலங்குளை வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனச் சரகா் சுரேஷூக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது தலைமையில் வனவா் சங்கா், வனக் காவலா்கள் பாா்த்திபன், திலகா் உள்ளிட்டோா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தென்மலையிலுள்ள தனியாா் தோட்டத்தில் வியாழக்கிழமை இரவு நடத்தப்பட்ட சோதனையில், காட்டுமாடு, காட்டுப் பன்றி ஆகியவற்றின் தலை, எலும்புகள், இறைச்சி வெட்டப் பயன்படுத்தப்பட்ட கட்டை, கத்தி உள்ளிட்டவற்றை கைப்பற்றினா். இதுதொடா்பாக அங்கு பணியிலிருந்த கம்பம் மெட்டு பகுதியைச் சோ்ந்த தாமஸ் மகன் பிஜூ தாமஸ் (38) என்பவரிடம் வனத் துறையினா் விசாரித்தனா். அதே தோட்டத்தில் நாட்டுத் துப்பாக்கி, காலி தோட்டா ஆகியவற்றையும் வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து பிஜூ தாமசை வனத் துறையினா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.