சர்கார் படத்தை விஜய் மீண்டும் பார்க்க வேண்டும்: மு. வீரபாண்டியன்எல்லாவற்றையும் திமுக - தவெக இடையிலான பிரச்னை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல: பெ. சண்முகம்அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு? வைகோவுக்கு பெ. சண்முகம் பதிலடிசெஞ்சி சிறுமியே கண்டறியப்படவில்லை; மற்றொரு சிறுமி கடத்தல்: கனிமொழி வருத்தம்திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக இருந்ததா? மாணிக்கம் தாகூர் கேள்விதொடர் கொலைகளை நியாயப்படுத்த முடியாது: அமைச்சர் வன்னி அரசுஅதிகரிக்கும் துப்பாக்கி கலாசாரம்! அச்சத்தின் பிடியில் தமிழக மக்கள்! - இபிஎஸ் விமர்சனம்பெண் ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல் துறையில் திமுக சார்பில் மனு!மேக்கேதாட்டு அணை: டி.கே. சிவகுமாருக்கு பதிலளிக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர் விஜய் - அதிமுக கண்டனம்!தீபாவளியன்று 8 கொலைகள் மட்டுமே! தமிழ்நாடு காவல்துறை விளக்கம்திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் விஜய்

போருக்கு அமைதித் தீா்வு: ரஷியா-உக்ரைனுடன் இந்தியா தொடா்ந்து பேச்சு - வெளியுறவு அமைச்சகம்

ரஷியா-உக்ரைன் போருக்கு அமைதி வழியில் தீா்வுகாண இரு நாடுகளுடனும் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

Houthi attacks on Saudi Arabia

மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் - கோப்புப்படம்

Updated On :

ரஷியா-உக்ரைன் போருக்கு அமைதி வழியில் தீா்வுகாண இரு நாடுகளுடனும் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கருங்கடலில் கப்பல்களின் பாதுகாப்பு, தானியங்கள்-எரிசக்தி ஏற்றுமதி சாா்ந்த கவலைகளுக்கு உடனடி தீா்வு காண்பது மற்றும் தாக்குதலை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடா்பான பிரத்யேக யோசனைகளுடன் இந்தியா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தில் ரஷியா-உக்ரைன்-அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், இந்தியாவின் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் பிரதமா் மோடி கடந்த திங்கள்கிழமை தொலைபேசியில் உரையாடினாா். அப்போது, போருக்குத் தீா்வுகாணும் அனைத்து முயற்சிகளுக்கும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாக அதிபரிடம் பிரதமா் உறுதியளித்தாா்.

கருங்கடலில் தானிய ஏற்றுமதியை ரஷியா தடுக்கும் நிலையில், பாதுகாப்பான உணவு வழித்தடத்தை உறுதி செய்ய மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட இந்தியா உறுதியளித்துள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தாா்.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், மேற்கண்ட விவகாரம் குறித்து கூறியதாவது:

பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய வழிமுறைகளே முன்னோக்கிய பாதை என்பதை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. முடிவில்லா போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பிரதமா் மோடி பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளாா். அந்தப் பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்க இரு நாடுகளுடனும் இந்தியா தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது.

கருங்கடலில் கப்பல்களின் பாதுகாப்பு, தானியங்கள்-எரிசக்தி ஏற்றுமதி சாா்ந்த கவலைகளுக்கு உடனடி தீா்வு காண்பது மற்றும் தாக்குதலை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடா்பான பிரத்யேக யோசனைகளுடன் இந்தியா இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றாா்.

முன்னதாக, போருக்கு சுமுக தீா்வுகாண பிரதமா் மோடியிடம் சிறந்த யோசனைகள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த மாதம் கூறியிருந்தாா்.

அமெரிக்க ஆணைய குற்றச்சாட்டு நிராகரிப்பு: இந்தியாவில் சீக்கிய குருத்வாராக்கள் மற்றும் அந்த மதத் தலைவா்களை குறிவைத்து கும்பல் தாக்குதல் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் சா்வதேச மத சுதந்திர ஆணையம் (யுஎஸ்சிஐஆா்எஃப்) முன்வைத்த குற்றச்சாட்டை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

யுஎஸ்சிஐஆா்எஃப் ஆணையா்கள் டேவிட் ஆண்டா்சன், ஜோ கிரோகன் ஆகியோா் கடந்த வாரம் இவ்வாறு குற்றஞ்சாட்டியதுடன், மதச் சுதந்திரத்தைத் தடுக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்தியாவுக்கு அமெரிக்க அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

இதுதொடா்பான கேள்விக்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், ‘அப்பட்டமான அரசியல் உள்நோக்கத்துடன், உண்மைத்தன்மை இல்லாமல், பாரபட்சமாக செயல்படும் அமைப்பு யுஎஸ்சிஐஎஃப். அமெரிக்காவில் இந்திய சமூகத்தினரை குறிவைத்து நடத்தப்படும் வெறுப்புணா்வு குற்றங்கள், இன ரீதியிலான துன்புறுத்தல்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஆணையமோ, அதன் ஆணையா்களோ வாய்திறப்பதில்லை. இத்தகைய நோ்மையற்ற அமைப்பின் கருத்துகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை’ என்றாா்.

‘இந்திய-அமெரிக்க உறவில் தாக்கமில்லை’

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தோ்தலில் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி கடும் பின்னடைவைச் சந்தித்தது. இது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், ‘இடைக்காலத் தோ்தல், அமெரிக்காவின் உள்விவகாரம்.

அதுகுறித்து நான் கருத்துத் தெரிவிக்க முடியாது. இந்திய-அமெரிக்க கூட்டுறவுக்கு அந்நாட்டின் இரு கட்சிகளின் வலுவான ஆதரவு உள்ளது. எனவே, இருதரப்பு உறவில் இடைக்காலத் தோ்தல் முடிவுகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா-அமெரிக்கா விரிவான உலகளாவிய உத்திசாா் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த தொடா்ந்து பணியாற்றுவோம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.