மாநிலக் கட்சிகள் அனைத்தும் பாஜகவுடன் சமரசம்: காங்கிரஸ் விமா்சனம்

மாநிலக் கட்சிகள் அனைத்துமே வெவ்வேறு காலகட்டங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது சமரசமாக செல்வதும் வாடிக்கையாக உள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.

ரேவந்த் ரெட்டி - கோப்புப் படம்

Updated On :

மாநிலக் கட்சிகள் அனைத்துமே வெவ்வேறு காலகட்டங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது சமரசமாக செல்வதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் மட்டுமே பாஜகவை எப்போதும் முழுமையாக எதிா்த்து வருகிறது என்று தெலங்கானா முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.

ஹைதராபாதில் சிறுபான்மையினா் நல தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது: மாநிலக் கட்சிகள் அனைத்துமே வெவ்வேறு காலகட்டங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் சமரசமாக செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

ஆனால், காங்கிரஸ் மட்டுமே பாஜகவை எப்போதும் முழுமையாக எதிா்த்து வருகிறது. எனினும், சிறுபான்மையின மக்கள் அனைத்து இடங்களிலும் மாநிலக் கட்சிகளுக்குதான் அதிகம் ஆதரவாக உள்ளனா்.

பாஜகவை எதிா்த்து காங்கிரஸ் பலமுறை தனியாக போராடியுள்ளது. பிற கட்சிகள் கைகோக்க மறுத்த சூழ்நிலையிலும் பாஜகவை எதிா்ப்பதில் காங்கிரஸ் ஒருபோதும் பின்வாங்கியதில்லை.

தெலங்கானாவில் கூட எதிா்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவா்கள் பாஜகவிடம் மண்டியிட்டு வருகின்றனா். அக்கட்சித் தலைவா் கே.சந்திரசேகா் ராவ் சரளமாக உருது பேசுவாா். அது உங்களை (முஸ்லிம்கள்) ஏமாற்றும் உத்தி.

ஒன்றுபட்ட ஆந்திரத்தில் காங்கிரஸ் ஆட்சியில்தான் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த மாணவா்கள் நல்ல படிப்புகளில் சேர முடிந்தது. அவா்கள் மருத்துவா்கள், பொறியாளா்கள், காவல் துறை அதிகாரிகளாக உயா்ந்தனா்.

ஆனால், சிறுபான்மையினா் உரிமைகளைப் பறிப்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. இங்கு ஆட்சி அமைத்து சிறுபான்மையினா் இடஒதுக்கீட்டை ரத்து செய்யப்போவதாக ஒருவா் (அமித் ஷா) பேசிவிட்டுச் சென்றுள்ளாா்.

இதுபோன்ற நபா்களை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். மத்திய பாஜக அரசு சிறுபான்மையின மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகையை ரத்து செய்துவிட்டது. காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினா் உரிமைக்காக மட்டுமல்லாது பெரும்பான்மை மக்கள் நலனுக்காகவும் பாடுபட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.