லித்தியம் அயன் பேட்டரிகள் மூலம் பெறப்படும் பிளாக் மாஸ் தூள் ஏற்றுமதி: மத்திய அரசு தடை

லித்தியம் அயன் பேட்டரிகள் மூலம் ‘பிளாக் மாஸ்’ தூளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Govt bans export of battery waste including lithium-ion black mass

லித்தியம் அயன் பேட்டரிகள் மூலம் ‘பிளாக் மாஸ்’ தூளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை

Updated On :

லித்தியம் அயன் பேட்டரிகள் மூலம் ‘பிளாக் மாஸ்’ தூளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் பேட்டரி தயாரிப்பின்போது கிடைக்கும் கழிவுகளை, அரைப்பதன் மூலம் பெறப்படும் தூள் போன்ற பொருள் ‘பிளாக் மாஸ்’ என்றழைக்கப்படுகிறது. இதில் லித்தியம், கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் போன்ற மதிப்புமிக்க கனிமங்கள் உள்ளன.

இந்நிலையில் லித்தியம் அயன் பேட்டரிகள் மூலம் பெறப்படும் அந்தத் தூளை ஏற்றுமதி செய்ய, மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) தடை விதித்துள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்தத் தூளை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல், உள்நாட்டிலேயே மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் நோக்கில், இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் பிற முக்கிய கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுவதை அதிகரிக்கும்.

இது அவற்றின் இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைத்து பேட்டரி உற்பத்தி, மின்சார வாகனங்கள், எரிசக்தி சேகரிப்பு, தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான விநியோக சங்கிலியை வலுப்படுத்தும் என்று மத்திய வா்த்தக அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.