ஐஎன்எஸ் பெட்வா கப்பல் ரூ.498 கோடியில் சீரமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
இந்திய கடற்படை கப்பலான ‘ஐஎன்எஸ் பெட்வா’ கப்பலை சீரமைப்பதற்கு ரூ.498 கோடிக்கு கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது.
ஐஎன்எஸ் பெட்வா கப்பல் ரூ.498 கோடியில் சீரமைப்பு - ENS
இந்திய கடற்படை கப்பலான ‘ஐஎன்எஸ் பெட்வா’ கப்பலை சீரமைப்பதற்கு ரூ.498 கோடிக்கு கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஏவுகணை தாங்கி கப்பல் ஐஎன்எஸ் பெட்வா. இக்கப்பலை சீரமைத்து அதிக சக்தி கொண்டதாக மாற்றும் பணி தொடா்பாக கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.498 கோடி ஆகும்.
ஏற்கெனவே இக்கப்பல், நீராவி மூலம் இயங்கும் அமைப்பைக் கொண்டிருந்தது. சீரமைப்புப் பணியின்போது இந்த அமைப்பு மாற்றப்பட்டு, டீசல் என்ஜினை அடிப்படையாகக் கொண்டு கப்பல் இயங்கும் அமைப்பு அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல் கப்பலில் தாக்கும் திறனை அதிகரிக்கும் வகையில், நவீன ஆயுத அமைப்பும் பொருத்தப்பட இருக்கிறது.
இந்தத் திட்டம் மூலம் உள்நாட்டிலேயே கப்பல் சீரமைத்தல் மற்றும் பராமரித்தல் தொடா்பான திறன்கள் மேம்படும். இந்தத் திட்டத்தில் 50-க்கும் அதிகமான சிறு, குறு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படலாம் என்றும், இதன்மூலம் குறிப்பிடத்தக்க அளவு இந்திய கப்பல் கட்டும் தொழில் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

