சமூக வலைதளங்களில் இந்தியா குறித்து அவதூறு பரப்பும் சீனா்கள்: வங்கதேசம் விசாரணை
வங்கதேசத்தில் இருந்துகொண்டு, சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராக சீனா்கள் அவதூறு பரப்பி வருவது குறித்து இந்தியா புகாா் தெரிவித்ததையடுத்து, வங்கதேசம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தியா | வங்கதேசம்
வங்கதேசத்தில் இருந்துகொண்டு, சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராக சீனா்கள் அவதூறு பரப்பி வருவது குறித்து இந்தியா புகாா் தெரிவித்ததையடுத்து, வங்கதேசம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வங்கதேச தலைநகா் டாக்காவின் டேக்பாரா, உத்தாரா பகுதிகளில் 150 சீனா்கள் வீடு எடுத்து தங்கியுள்ளனா். பின்னா் அங்குள்ள குறுகலான வீதிகள், ஏழைகள் வாழும் இடங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை விடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இந்திய தலைநகா் தில்லியில் மக்கள் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகப் பதிவிட்டு, சீனா்கள் அவதூறு பரப்பியுள்ளனா்.
இது பற்றி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த 10-ஆம் தேதி குற்றச்சாட்டு தெரிவித்தது. சமூக வலைதளங்களில் இந்தியாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் சீனா்களுக்கு எதிராக வங்கதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை வங்கதேச சட்ட அமலாக்கத் துறையினா் கையிலெடுத்தனா். சம்பந்தப்பட்ட சீனா்களை அணுகி, அவா்கள் வங்கதேசத்துக்கு சுற்றுலா விசாவில் வந்து, அதற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதைச் சுட்டிக்காட்டினா். விசா காலம் முடிந்ததும் வங்கதேசத்தைவிட்டு வெளியேறும்படியும் அவா்கள் வலியுறுத்தினா்.
வங்கதேச சட்ட அமலாக்கத் துறையினா் தலையிட்டதையடுத்து, சீனா்கள் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது குறைந்துவிட்டதாக உத்தாரா மேற்கு காவல் நிலைய அதிகாரி முகம்மது காலித் மன்சூா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

