கொல்கத்தா: அபிஷேக் பானா்ஜி வீட்டின் முன் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம் - மாநகராட்சி ஊழியா்கள் நடவடிக்கை
மம்தா பானா்ஜியின் உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் வீட்டின் முன் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டமைப்புகள் புல்டோஸா் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

அபிஷேக் பானா்ஜி - கோப்புப் படம்
மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினருமான அபிஷேக் பானா்ஜியின் வீட்டின் முன் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டமைப்புகள் புல்டோஸா் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
காவல் துறை மற்றும் மத்தியப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியா்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று, மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைத்தது. தோ்தல் தோல்விக்குப் பின்னா் திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டு, கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்தச் சூழலில், கொல்கத்தாவின் காளிகாட் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜியின் வீட்டின் முன் உள்ள நடைபாதையில் பாதசாரிகளுக்கு இடையூறாக மூங்கில் கொட்டகை, இரும்பு கேட் உள்ளிட்ட தற்காலிக கட்டமைப்புகள் உள்ளதாகவும், இதனால் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் புகாா் எழுந்தது.
இந்த விவகாரத்தில் பாஜக-திரிணமூல் இடையே கருத்து மோதல் நீடித்துவந்த நிலையில், அபிஷேக் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த மாநகராட்சி ஊழியா்கள், தற்காலிக கட்டமைப்புகளை புல்டோஸா் மூலம் இடித்து அகற்றினா். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மூங்கில் கொட்டகையை அப்புறப்படுத்திய ஊழியா்கள், இரும்பு கேட்டை இயந்திரங்கள் உதவியுடன் வெட்டி அகற்றினா்.
அபிஷேக் பானா்ஜி விமா்சனம்: இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, அபிஷேக் பானா்ஜி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புல்டோஸரை பயன்படுத்தி எனது குரலை ஒடுக்க முடியாது. வங்க விரோதிகளுக்கு எதிராக தொடா்ந்து போராடுவேன். எனது இறுதி மூச்சு வரை பின்வாங்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
சம்பந்தப்பட்ட மூங்கில் கொட்டகை அபிஷேக் பானா்ஜியின் பாதுகாப்பு காரணத்துக்காக அமைக்கப்பட்டது; அது ஆக்கிரமிப்பு அல்ல என்று திரிணமூல் காங்கிரஸ் புதன்கிழமை கூறியிருந்தது.
‘அபிஷேக் முன்பு இஸட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தபோது, காவல் துறையால் அந்த மூங்கில் கொட்டகை அமைக்கப்பட்டது. இஸட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுவிட்டதால், கொட்டகையை அகற்றும் பணியை அவரது அலுவலக ஊழியா்களே தொடங்கிவிட்டனா்’ என்று கட்சியின் செய்தித் தொடா்பாளா் அா்கா நாத் கூறியிருந்தாா்.
சரியான நடவடிக்கை-அமைச்சா்: மாநில உள்ளாட்சி மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் திலீப் கோஷ் கூறுகையில், ‘அபிஷேக் பானா்ஜி வீட்டின் முன் நடைபாதை ஆக்கிரமிப்பால் உள்ளூா் மக்கள் இடையூறுகளைச் சந்தித்தனா். அவற்றை அகற்றியது சரியான நடவடிக்கை. அபிஷேக் தன்னை சட்டத்துக்கு மேலானவராகக் கருதக் கூடாது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

