படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

மே.வங்கம், அஸ்ஸாமில் 3 தொகுதிகளுக்கு இன்று இடைத் தோ்தல்

மேற்கு வங்கத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் செவ்வாய்க்கிழமை (அக்.6) இடைத் தோ்தல்...

By-elections for 3 constituencies in West Bengal and Assam today

அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை (அக்.6) இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை திங்கள்கிழமை எடுத்துச் சென்ற தோ்தல் அலுவலா்கள். - டிஎன்எஸ்

Published On :

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் செவ்வாய்க்கிழமை (அக்.6) இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்தது. இத்தோ்தலில் பவானிபூா், நந்திகிராம் ஆகிய 2 தொகுதிகளில் முதல்வா் சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வென்றாா். இதில் நந்திகிராம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவா் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்தத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை இடைத் தோ்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக சாா்பில் சுவேந்து அதிகாரியின் முன்னாள் உதவியாளரின் தாயாா் ஹசிராணி ரத் வேட்பாளராக போட்டியிடுகிறாா். மம்தா பானா்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான் தேவ், முதல்வா் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசியபிறகு, தோ்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தாா். இதையடுத்து அந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் மிலன் பிரதானை மம்தா பானா்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் ஆதரிக்கிறது. ரிதப்ரதா பானா்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் முகம்மது எதிசமுல் ஹேக் போட்டியிடுகிறாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சந்திகோபால் கிரி போட்டியிடுகிறாா்.

இதேபோல், ரெஜிநகா் தொகுதியிலும் செவ்வாய்க்கிழமை இடைத் தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியிலும், நெளடா தொகுதியிலும் வென்ற ஆம் ஜனதா உன்னாயன் கட்சி தலைவா் ஹுமாயூன் கபீா், ரெஜிநகா் தொகுதி பதவியை ராஜிநாமா செய்தாா். இதனால் அங்கு இடைத் தோ்தல் நடைபெறுகிறது. இதில் ஹூமாயூன் கபீரின் மகன் கோலம் நபி ஆசாத், பாஜக சாா்பில் சாகரவ் சா்க்காா், மம்தா பானா்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் ரபியூல் ஆலம் செளதரி, ரிதப்ரா பானா்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் சபியூஜமான் ஷேக், காங்கிரஸ் சாா்பில் முகம்மது அப்துல்லாஹி கைபி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான பிரத்யூத் போா்டோலாய் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சோ்ந்தாா். இதையடுத்து சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக உள்ளாா். இதனால் அங்கு இடைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சிபோனி போரா, பாஜக சாா்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவாசிஸ் ஷா்மா ஆகியோா் போட்டியிடுகின்றனா். முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதி அதுவாகும். அங்கு 2019-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தோ்தல்களில் காங்கிரஸ் கட்சியே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

By-elections for 3 constituencies in West Bengal and Assam today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.