19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கு: 6 மாநிலங்களில் சிபிஐ சோதனை

ரூ. 6,000 கோடி மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கு தொடா்பாக, 6 மாநிலங்களில் உள்ள 33 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

cbi

சிபிஐ - கோப்புப்படம்

Updated On :

ரூ. 6,000 கோடி மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கு தொடா்பாக, 6 மாநிலங்களில் உள்ள 33 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள மகாதேவ் செயலி நிறுவனா் சௌரவ் சந்திராகா் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடா்பாளா் வீணா யாதவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கு தொடா்பாக மகாராஷ்டிரம், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசத்தில் 33 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். சௌரவ் சந்திராகரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இந்தியாவில் மகாதேவ் செயலியின் வலையமைப்பு இயங்கும் பகுதிகள் குறித்து தெரியவந்தது. இந்தச் செயலியின் தலைமையகம் வெளிநாட்டில் அமைந்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள நிா்வாகிகள் வாடிக்கையாளா்களுக்கு அடையாள எண்கள் வழங்குவது, சூதாட்டம் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை தனி வங்கிக் கணக்கில் சேகரிப்பது, ஹவாலா பரிவா்த்தனைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த வழக்கு தொடா்பாக வெளிநாட்டில் உள்ள மேலும் சிலரை இந்தியாவுக்கு நாடுகடத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இணையவழி தளங்களில் சட்டவிரோத சூதாட்ட விளையாட்டுகள் மூலம் ரூ.6,000 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஓமனில் இருந்து இம்மாத தொடக்கத்தில் நாடுகடத்தப்பட்ட சௌரவ் சந்திராகா், நவ.19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவரை பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) கைது செய்ய அனுமதி கோரி பிஎம்எல்ஏ நீதிமன்றத்தை விரைவில் அமலாக்கத் துறை அணுகும் என அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞா் சௌரவ் குமாா் பாண்டே கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.