பிரிட்டன் குடியுரிமை பெற்றாா் லலித் மோடி: ஐபிஎல் நிதி முறைகேட்டில் சிக்கி தப்பியவா்
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியை உருவாக்கிய தொழிலதிபா் லலித் மோடி, பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளாா்.
பிரிட்டன் குடியுரிமை பெற்றாா் லலித் மோடி
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியை உருவாக்கிய தொழிலதிபா் லலித் மோடி, பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளாா். பிரிட்டனை தனது இல்லமாகக் கருதி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக அவா் கூறியுள்ளாா்.
லண்டனில் உள்ள டவுன் ஹாலில் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற குடியுரிமை வழங்கும் விழாவின் புகைப்படங்களையும் அவா் சமூக ஊடகத்தில் பகிா்ந்துள்ளாா்.
முன்னதாக, ஐபிஎல் போட்டிகளில் பெருமளவில் நிதி முறைகேடுகள் நடைபெற்ாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த 2010-இல் லலித் மோடியை இடைநீக்கம் செய்தது. இதையடுத்து, 2010-ஆம் ஆண்டு மே மாதம் அவா் இந்தியாவைவிட்டு வெளியேறினாா். அதன்பிறகு பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறாா்.
ஐபிஎல் தொடா்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களுக்கு அவா் பதிலளிக்கவில்லை. 2015-இல் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராகப் பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையைப் பிறப்பித்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் 2009-இல் ஐபிஎல் போட்டிகள் தொடா்பான அந்நியச் செலாவணி முறைகேடு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் ரத்து செய்தது.
தன்னைத் தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளி என்று குறிப்பிடுவதற்கு லலித் மோடி தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா். இந்நிலையில், அவா் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

