
பிஎஸ்எல் 12ஆவது சீசனுக்கான தேதிகள் அறிவிப்பு..! மீண்டும் 8 அணிகளுடன் தொடர்கிறது!
பாகிஸ்தான் பிரீமியர் லீக் 12ஆவது சீசன் போட்டிகளுக்கான தேதி குறித்து...

பிஎஸ்எல் 11 கோப்பை வென்ற அணி. (கோப்புப் படம்) - AFP
பாகிஸ்தான் பிரீமியர் லீக் 12ஆவது சீசன் போட்டிகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டு மார்ச் 18 முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) போல பாகிஸ்தானிலும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் பிரீமியர் லீக்) போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை 11 சீசன்கள் முடிவடைந்துள்ளன.
உலக அளவில் மிகப்பெரிய டி20 லீக்காக ஐபிஎல் மட்டுமே இருக்கிறது. பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதிக்கப்பட்டதில் இருந்து அவர்களுக்கென தனியான லீக் நடத்தப்படுகிறது.
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் விளையாடுகிறார்கள். ஒருமுறை பிஎஸ்எல் தொடரில் விளையாட தேர்வான வீரர் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்ததும் அதிலிருந்து விலகியதும் சர்ச்சையானது.
கடந்த சீசனில் கடாஃபி திடலில் 32,461 பார்வையாளர்கள் மத்தியில் பெஷாவர் ஜால்மி அணி கோப்பை வென்றது. கடந்த சீசனில்தான் 8 அணிகள் பங்கேற்றன. தற்போது அடுத்த சீசனிலும் 8 அணிகள் மோதுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மோஷின் நக்வி, “இந்த லீக் என்ன செய்யும் என்பதை பிஎஸ்எல் 11 உலகத்திற்கு காண்பித்தது. அதிகமான மக்கள், ஒளிபரப்பு என பல சாதனைகள் படைக்கப்பட்டன. அடுத்த சீசன் இன்னும் கூடுதல் சாதனைகள் படைக்கும்” எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் ஹைதராபாத் கிங்ஸ்மென், இஸ்லாமாபாத் யுனைடெட், கராச்சி கிங்ஸ், லாகூர் கலாந்தர், முல்தான் சுல்தான், பெஷாவர் சல்மி, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் ராவல்பிண்டி ஆகிய 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.
Summary
Eight-team PSL 12 set from March 18 to May 2 next year
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







