வரலாறு உங்களிடம் கனிவாக நடக்கும்... அஜித் அகர்கரை வாழ்த்திய கம்பீர்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியது குறித்து...

அஜித் அகர்கர், கௌதம் கம்பீர் - படங்கள்: பிசிசிஐ, பிடிஐ
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் வரலாறு கனிவுடன் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
அஜித் அகர்கர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவி முடிவடைந்தது. அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதியவரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
அஜித் அகர்கர் தேர்வுக்குழுத் தலைவராக இருக்கும்போது மூன்று ஐசிசி கோப்பைகள் இந்திய அணி வென்றுள்ளது. இதில் 2024, 2026 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி அடங்கும்.
கடந்த செவ்வாய்க்கிழமை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியிருப்பதாவது:
எனதருமை அஜித் அண்ணா, உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மரியாதைக்குரியது. அந்த 3 ஐசிசி கோப்பைகளே உங்களது உறுதிக்கான சாட்சியம். எப்போதுமே அணியே முதன்மையானது.
வரலாறு உங்களிடம் கனிவாக நடந்துகொள்ளும் என நிச்சயமாகக் கூறுவேன். எல்லாவற்றுக்கும் நன்றி. உங்களது வருங்காலத்துக்கு என் மனப்பூர்வமாக வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
இந்திய அணியின் அடுத்த தேர்வுக்குழுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் உடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது.
A tenure marked by some truly special moments for Indian cricket â three ICC trophies, two Asia Cup titles and back-to-back Asian Games Gold medals, along with a run to the 2023 ODI World Cup final.
— BCCI (@BCCI) October 7, 2026
Thank you, Mr Ajit Agarkar @imAagarkar, for your commitment, conviction and⦠pic.twitter.com/8dAmaY7Xby
Summary
History will be kinder to you: Gambhir applauds former chief selector Ajit Agarkar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






