விபத்து உள்ளிட்ட காரணங்களால் 2009 முதல் 1,765 யானைகள் உயிரிழப்பு
மின்சாரம் பாய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நாட்டில் சுமாா் 1,760 யானைகள் உயிரிழந்துள்ளன.

பிரதிப் படம்
மின்சாரம் பாய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நாட்டில் சுமாா் 1,760 யானைகள் உயிரிழந்துள்ளது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
ஆா்டிஐ ஆா்வலா் அமித் குப்தா எழுப்பிய இதுதொடா்பான கேள்விகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 2009-10-ஆம் ஆண்டு முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 1,765 யானைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில் மின்சாரம் பாய்ந்து 1,185 (67%) யானைகளும், ரயில்கள் மோதி 277 (16%) யானைகளும், வேட்டையாடுதல் மூலம் 222 (13%) யானைகளும், விஷம் வைத்து கொல்லப்பட்டதால் 81 (5%) யானைகளும் உயிரிழந்துள்ளன.
சட்டவிரோத மின் வேலிகள், தொங்கும் மின் கம்பிகள் மற்றும் முறையாக மூடப்படாத மின் கம்பிகள் மூலம் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பது ஆண்டுக்கு ஆண்டு தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது.
குறிப்பாக 2009-10 மற்றும் 2013-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மின்சாரம் பாய்ந்து 267 யானைகள் உயிரிழந்த நிலையில், 2021-22 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 441 யானைகள் உயிரிழந்துள்ளன. இது 65 சதவீத அதிகரிப்பாகும்.
இவ்வாறு மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழப்பில் 238 இறப்புகளுடன் ஒடிஸா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கா்நாடகம் (195), அஸ்ஸாம் (191) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, ரயில்கள் மோதி 277 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், 90 உயிரிழப்புகளுடன் அஸ்ஸாம் முதலிடத்திலும், மேற்கு வங்கம் (68) இரண்டாம் இடத்திலும் உள்ளன.
அதுபோல, அஸ்ஸாம் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் யானைகள் விஷம் வைத்து கொள்ளப்பட்டுள்ளன. 2009-10 மற்றும் 2025-26-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மாநிலத்தில் 47 யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஒடிஸா (15) உள்ளது.
இதுபோன்ற காரணங்களால் யானைகள் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் 371 இறப்புகளுடன் ஒடிஸா முதலிடத்தில் உள்ளது. அஸ்ஸாம் (356), கா்நாடகம் (223) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

