மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி!

மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து யானைகள் பலியாகியிருப்பது பற்றி....

Three elephants die after touching live wire in Bengal’s Salboni

கோப்புப்படம்.

Published On :

மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூரின் சல்போனி பகுதியில் உள்ள நெல் வயலில் தாய் மற்றும் அதன் இரண்டு குட்டிகள் உட்பட மூன்று யானைகள் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்தன. இது மின்கசிவு காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முதற்கட்டத் தகவல்களின்படி, யானைகள் விவசாய நிலத்தின் வழியாகச் செல்லும்போது உயர் அழுத்த மின் கம்பியில் உரசியிருக்கலாம் என்று தெரிகிறது. உள்ளூர் கிராமவாசிகள் முதலில் சடலங்களைக் கண்டறிந்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான சரியான காரணம் கண்டறியப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைக்கூட்டம் அப்பகுதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த மூன்று யானைகளும் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் மின் பம்புடன் இணைக்கப்பட்டிருந்த மின் கம்பியைத் தொட்டதாகக் கூறப்படுகிறது.

வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விவசாயிகள் தங்கள் பயிர்களை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வயல்களைச் சுற்றிலும் மின் கம்பிகளை அடிக்கடி பயன்படுத்துவதால், ஜங்கல்மஹால் பகுதியில் மின்சாரம் தாக்கி யானைகள் பலியாவது இதற்கு முன்பும் நடந்துள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

At least three elephants, including a mother and her two calves, are found dead in a paddy field in Salboni, West Midnapore, on Sunday morning, in a suspected case of electrocution.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.