
மேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்!
மேற்கு வங்கத்தில் மமதா ஆதரவு எம்எல்ஏ குணால் கோஷ் கார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து....

எம்எல்ஏ குணால் கோஷ்
மேற்கு வங்கத்தில் மமதா ஆதரவு எம்எல்ஏ குணால் கோஷ் கார் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், மமதா பானா்ஜிக்கு நெருக்கமான எம்எல்ஏ குணால் கோஷ் ஞாயிற்றுக்கிழமை கிழக்கு கொல்கத்தாவில் உள்ள தனது பெலியாகட்டா தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது கார் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.
நர்கெல்டங்கா பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சுத்தியலால் தனது காரின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்ததாகவும், அவர்களில் ஒருவர் தனது பாதுகாப்புப் பணியாளர்களை நோக்கி துப்பாக்கியால் குறிவைத்ததாகவும் கோஷ் கூறினார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கோஷ் தெரிவித்தார்.
இதுகுறித்து குணால் கோஷ் கூறியதாவது, நேற்று உத்தர்பாராவில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று, அவர்கள் என்னைக் கொல்ல முயன்றனர் என்று செய்தியாளர்களிடம் காரின் முன்பக்கக் கண்ணாடியின் உடைந்த துண்டுகளைக் காட்டியபடி தெரிவித்தார்.
முன்னதாக ஹூக்ளி மாவட்டத்தில் சனிக்கிழமை மமதா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குணால் கோஷ் சென்றுகொண்டிருந்தபோது அவரது காா் மீது கற்கள், முட்டைகள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த தாக்குதலைத் தொடர்ந்து குணால் கோஷ் கார் மீது இன்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
TMC MLA Kunal Ghosh, aligned with the Mamata Banerjee camp, on Sunday alleged that his car was attacked while he was on his way to a programme in his Beliaghata constituency in east Kolkata.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






