உங்களுக்குத் தேவை மசாலா! சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு தவெக அளித்த பதில்!பிலிப்பின்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!புழல் சிறையில் அன்பில் மகேஸை மீண்டும் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்! தனி விமானத்தில் தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!நடிகை த்ரிஷா திருமணம் எப்போது? பிரபல பெண் ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு!ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக மனைவி டெய்சி மார்ட்டின் அறிவிப்பு!பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்த பயணிகள்! ஒருவர் பலி!திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!

நிறைவடைந்தது சார் தாம் யாத்திரை! இன்று இரவுடன் மூடப்படுகிறது பத்ரிநாத் கோயில் நடை!!

பத்ரிநாத் கோயிலின் நடை அடைப்பு பற்றி..

Badrinath

பத்ரிநாத் கோயில் - file photo

Updated On :

பத்ரிநாத் கோயிலின் நடை திங்கள்கிழமை இரவு அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனுடன் இந்தாண்டுக்கான சார் தாம் யாத்திரை குளிர்காலத்திற்காக அதிகாரப்பூர்வமாக நிறைவடைகிறது.

இதுதொடர்பாக பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுவின் தலைவர் ஹேமந்த் திவேதி கூறுகையில்,

பத்ரிநாத் கோயிலின் நடை இன்று இரவு 9.37 மணிக்கு மூடப்படுகிறது. கோயில் நடை மூடுவதற்கான சடங்குகளில் பஞ்ச பூஜைகள் உள்ளிட்ட மதச் சடங்குகள் நடத்தப்பட்டதாகவும், இன்று காலை வழிபாட்டின்போது பகவான் பத்ரிநாத்துக்கு சிறப்பு மலர் அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பத்ரிநாத் கோயிலுடன் பாண்டுகேஷ்வர் மற்றும் ஜோதிர்மடத்தில் உள்ள நரசிங்கர் கோயிலும் குளிர்கால சடங்குகள் நிறைவடைந்து மூடப்படுகிறது.

இந்தாண்டு யாத்திரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்தது. சுமார் 23.5 லட்சம் பக்தர்கள் பத்ரிநாத்திற்கு வருகை தந்துள்ளனர். உத்தரகண்டில் உள்ள சார் தாம் புனிதத் தலங்களில் மொத்தம் சுமார் 65 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

யாத்திரை சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய கோயில் குழு பணியாளர்கள், பூசாரிகள், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ஊடகங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இமயமலைப் பகுதியில் உள்ள புனிதத் தலங்களின் நடை மூடப்பட்ட பிறகும், பக்தர்கள் குளிர்கால வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று இறைவனின் ஆசியைப் பெறும் வகையில், மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக திவேதி மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.