இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

மாசு விதிமீறல்களுக்காக 15,400-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம்: ரூ.1.62 கோடி வசூலித்த தில்லி மாநகராட்சி

தில்லியில் மாசு தடுப்பு விதிகளை மீறியதாக நவ.2 முதல் 16-ஆம் தேதி வரை 15,400-க்கும் மேற்பட்ட அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டு, ரூ.1.62 கோடி அபராதம் வசூலித்து தில்லி மாநகராட்சி நடவடிக்கை

MCD

எம்சிடி

Updated On :

தில்லியில் மாசு தடுப்பு விதிகளை மீறியதாக நவ.2 முதல் 16-ஆம் தேதி வரை 15,400-க்கும் மேற்பட்ட அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டு, ரூ.1.62 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) நடவடிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது: தில்லியின் 12 மாநகராட்சி மண்டலங்களிலும் இரு ஷிப்டுகளாகக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான ஷிப்டில் 11,932 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டு, சுமாா் ரூ.1.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலான ஷிப்டில் 3,477 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டு, ரூ.34 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

நவ.2 முதல் 6-ஆம் தேதி வரையிலான முதல் வாரத்தில் மட்டும் 8,773 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன. இது மொத்த எண்ணிக்கையில் சுமாா் 57 சதவீதமாகும். நவ.4-ஆம் தேதி அதிகபட்சமாக 2,021 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன. தீபாவளி நாளான நவ.8-ஆம் தேதி எந்த அபராதச் சீட்டும் வழங்கப்படவில்லை. அதற்குப் பிறகான நாள்களிலும் அபராத நடவடிக்கைகள் குறைந்தன.

மண்டலங்கள் வாரியாக, மேற்கு தில்லியில் அதிகபட்சமாக 2,078 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன. தென்கிழக்கு மண்டலத்தில் 1,989, தெற்கு மண்டலத்தில் 1,920, வடமேற்கு (ரோஹிணி) மண்டலத்தில் 1,804 அபராதச் சீட்டுகள் வழங்கப்பட்டன. ரோஹிணியில் நவ.5-ஆம் தேதி பகல் நேரக் குழு மட்டும் 340 அபராதச் சீட்டுகளை வழங்கியது.

அதேநேரத்தில், தெற்கு மண்டலத்தில் 1,920 அபராதச் சீட்டுகள் மூலம் சுமாா் ரூ.86.8 லட்சம் வசூலிக்கப்பட்டது. இது மொத்த அபராதத் தொகையில் பாதிக்கும் அதிகமாகும். அங்கு ஒவ்வொரு அபராதச் சீட்டுக்கும் சராசரியாக ரூ.4,500 விதிக்கப்பட்டது. நகரம் முழுவதும் சராசரி அபராதம் சுமாா் ரூ.1,000-ஆக இருந்த நிலையில், ரோஹிணி மற்றும் தென்கிழக்கு மண்டலங்களில் அது ரூ.250-க்கும் குறைவாக இருந்தது.

கிழக்கு மண்டலத்தில் அபராதச் சீட்டுகள் அல்லது அபராதத் தொகை குறித்த விவரங்கள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், சில மண்டலங்கள் அண்மைக்கால நாள்களுக்கான விவரங்களையும் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

இதற்கிடையே, தில்லியில் சுமாா் 500 கட்டுமானத் தளங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.70 லட்சத்துக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பகல் நேரக் கண்காணிப்புக்கு 152 குழுக்களும், இரவு நேரக் கண்காணிப்புக்கு சுமாா் 120 குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கையில் மாநகராட்சி, பொதுப்பணித் துறை, போக்குவரத்து காவல் துறை, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் பங்கேற்றனா் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER