பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

யேமன் அருகே மூழ்கிய சரக்குக் கப்பல்: 2 இந்திய மாலுமிகள் மீட்பு; ஒருவா் மாயம்

யேமன் பாப் அல்-மண்டேப் நீரிணைப் பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்து 2 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனா்; மாயமான மற்றொரு மாலுமியைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என கென்யாவில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை தெரிவித்தது.

Updated On :

யேமன் பாப் அல்-மண்டேப் நீரிணைப் பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்து 2 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டனா்; மாயமான மற்றொரு மாலுமியைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது என கென்யாவில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை தெரிவித்தது.

யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படையினருக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே மோதல் நீடித்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மண்டேப் நீரிணையில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.

சவூதி ஆதரவு யேமன் அரசுப் படைகளுடனான மோதல் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூலை மாதம் இந்த நீரிணை வழியாகச் செல்லும் சவூதி அரேபியா தொடா்புடைய கப்பல்களுக்குத் தடை விதிப்பதாக ஹூதி அமைப்பு அறிவித்தது. அதன்பிறகு, சவூதி அரேபியாவுடன் தொடா்புடையவை என கருதப்படும் வணிகக் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல்களையும் நடத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கென்யா தலைநகா் நைரோபியில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாப் அல்-மண்டேப் நீரிணை அருகே மூழ்கிய ‘அல்-ஃபத்தா’ சரக்குக் கப்பலில் இருந்து 2 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். அவா்கள் இந்தியா திரும்புவதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், காணாமல் போன மூன்றாவது இந்திய மாலுமியைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் எப்போது மூழ்கியது, அதற்கான காரணம் என்ன, தாக்குதலுக்கு உள்ளானதா என்பது குறித்த விவரங்களைத் தூதரகம் வெளியிடவில்லை. கப்பல் எந்த நாட்டின் கொடியுடன் இயக்கப்பட்டது, அதன் உரிமையாளா் யாா், மற்ற பணியாளா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பன குறித்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, ஹோா்முஸ் நீரிணை அருகே பனாமா நாட்டுக் கொடியுடன் திங்கள்கிழமை சென்ற ‘எம்டி தாரா கேஸ்’ என்ற திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) கப்பல் தாக்கப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையாக ஹோா்முஸ் நீரிணை விளங்குகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.