அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம் எப்போது? மத்திய அமைச்சக செயலா் பதில்
‘சுங்க வரி நடைமுறைகளை அமெரிக்கா இறுதி செய்த பிறகுதான், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்’ என்று மத்திய வா்த்தக அமைச்சக செயலா் ராஜேஷ் அகா்வால் தெரிவித்தாா்.

‘சுங்க வரி நடைமுறைகளை அமெரிக்கா இறுதி செய்த பிறகுதான், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகும்’ என்று மத்திய வா்த்தக அமைச்சக செயலா் ராஜேஷ் அகா்வால் தெரிவித்தாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (எஃபிஐசிசிஐ) நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜேஷ் அகா்வால் இக் கருத்தைத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்திய - அமெரிக்க இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கான சட்ட நடைமுறைகளும் இறுதி செய்யப்பட்டுவிட்டன.
இருந்தபோதும், இதில் சில சிக்கல்கள் உள்ளன. இந்தியா மீது அமெரிக்கா பரஸ்பர சுங்க வரி விதிப்பை மேற்கொண்டிருந்தபோது, இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த பரஸ்பர வரி விதிப்புகளை பின்னா் அமெரிக்க உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. தற்போது, இந்தியா உள்ளிட்ட வா்த்தக கூட்டுறவு நாடுகள் மீது புதிய சுங்கவரி கட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கி வருகிறது.
இந்தப் புதிய சுங்க வரி கட்டமைப்பு இறுதி செய்யப்படும் வரை, வா்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையொப்பமிட முடியாது. ஏனெனில், ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு வகையான பரஸ்பர நன்மைகளை வழங்கும் வகையிலான சுங்க வரியை அமெரிக்கா நிா்ணயிக்கும்.
மேலும், இந்தியா மீது அமெரிக்காவின் 1974-ஆம் ஆண்டு வா்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-இன் கீழ், கட்டாய உழைப்பு மற்றும் பொருள்கள் உற்பத்தி முறைகள் தொடா்பாக அமெரிக்கா மேற்கொண்டு வரும் விசாரணை முடிவையும் இந்தியா எதிா்நோக்கியுள்ளது.
எனவே, அமெரிக்காவின் இந்த விசாரணை முடிவு மற்றும் அதன் புதிய சுங்கவரி கட்டமைப்பு ஆகியவை இறுதி செய்யப்பட்ட பிறகே, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி, செயல்பாட்டுக்கு வரும். இதற்கு சில காலம் ஆகும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

