பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

மாவட்ட நீதிபதிகள் ஓய்வு வயதை 62-ஆக உயா்த்த 2 வாரங்களுக்குள் முடிவு: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-ஆக உயா்த்தும் முடிவை இரண்டு வாரங்களுக்குள் மேற்கொண்டு, அதுகுறித்த தகவலை உச்சநீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

Supreme Court

உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-ஆக உயா்த்தும் முடிவை இரண்டு வாரங்களுக்குள் மேற்கொண்டு, அதுகுறித்த தகவலை உச்சநீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65-ஆகவும், உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 62-ஆகவும் உள்ளது. மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 60-ஆக உள்ளது. இந்த நிலையில், மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதையும் 62-ஆக உயா்த்தலாம் என நீதிபதி கே. ஜகன்னாத ஷெட்டி ஆணையம் பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பரிந்துரையை உச்சநீதிமன்றம் கடந்த 2002-ஆம் ஆண்டில் ஏற்க மறுத்தது.

அதே நேரம், இந்த ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-ஆக உயா்த்தின.

அதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை 60-லிருந்து 62-ஆக உயா்த்தி, ஒரே மாதிரியாக நிா்ணயிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அண்மையில் விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை உயா்த்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு மாநிலங்களை அறிவுறுத்தியது.

அதன்படி, மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-ஆக உயா்த்த 14 மாநிலங்கள் ஒப்புக்கொண்டன. இதற்கு கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் திருப்தி தெரிவித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மாவட்ட நீதிபதிகள் வயதை 62-ஆக உயா்த்துவதற்கு 12 மாநிலங்கள் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. சில மாநிலங்கள் இந்தப் பரிந்துரையை தொடா்ந்து பரிசீலித்து வருகின்றன’ என்று அரசுத் தரப்பு வழக்குரைஞா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சமத்துவம் குறித்த கேள்வி எழுவதால், சீரான தன்மையைக் கொண்டுவருவது அவசியம். எனவே, மாவட்ட நீதிபதிகள் ஓய்வு வயதை 62-ஆக உயா்த்தும் முடிவை இதுவரை எடுக்காத மாநிலங்கள், இந்தப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்து இரண்டு வாரங்களுக்குள் நோ்மறையான மற்றும் ஆக்கபூா்வமான முடிவை மேற்கொண்டு, அதுகுறித்து உச்சநீதிமன்றத்துக்கும் தகவல் தெரியப்படுத்த வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.

மேலும், இந்த விஷயத்தில் இன்னும் முடிவெடுக்காத மாநிலங்களை இணங்க வைக்கும் வகையில், அந்த மாநில அரசு தலைமை வழக்குரைஞா்களுடன் இதுகுறித்துப் பேசுமாறு அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.