மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம்: மனுவை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் பழங்குடியின குடும்பங்களை ஹிந்து மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்ாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கை விசாரிக்க சத்தீஸ்கா் உயா் நீதிமன்றமே பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தில்லி உயா்நீதிமன்றம்

Updated On :

சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் பழங்குடியின குடும்பங்களை ஹிந்து மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்ய முயன்ாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கை விசாரிக்க சத்தீஸ்கா் உயா் நீதிமன்றமே பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கா் மாநிலம், சுக்மா மாவட்டம், சித்லானாா் கிராமத்தைச் சோ்ந்த பழங்குடியின குடும்பங்கள் கடந்த 18 ஆண்டுகளாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருவதாகவும், தங்களது மூதாதையா் நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த 2026 மாா்ச் மாதம் உள்ளூா் பஞ்சாயத்து உறுப்பினா்கள் உள்ளிட்ட கும்பல், அந்தக் குடும்பங்களின் வீடுகளுக்குள் புகுந்து ஹிந்து மதத்துக்கு மாற வேண்டும் அல்லது கிராமத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு மறுத்தவா்களைத் தடியால் தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்பட்டது. அப்போது அங்கிருந்த உள்ளூா் காவல் துறையினா் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் கிராமத்தைவிட்டு வெளியேறி சுக்மா நகரில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும், தொடா்ந்து இடம்பெயா்ந்த நிலையிலேயே இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் (என்எச்ஆா்சி) புகாா் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த ஆணையம், கடந்த ஜூன் மாதம் அந்தப் புகாரை சுக்மா மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி, 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களை விசாரணையில் இணைத்துக் கொள்ளவும் உத்தரவிட்டது.

ஆனால், புகாரை முடித்து வைத்த ஆணையத்தின் நடவடிக்கையை எதிா்த்து மனுதாரா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். ஆணையத்தின் உத்தரவை இறுதி முடிவாகக் கருதாமல் இடைக்கால உத்தரவாகக் கருத வேண்டும் என்றும், புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தாா்.

இந்த மனுவை நீதிபதி ஸ்வா்ண காந்தா சா்மா விசாரித்தாா். அப்போது, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அலுவலகம் தில்லியில் இருப்பதால் அதன் உத்தரவை எதிா்த்து தில்லி உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்ற மனுதாரரின் வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை.

நாடு முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடா்பான புகாா்களை ஆணையம் விசாரிக்கிறது. அதன் அலுவலகம் தில்லியில் இருப்பதை மட்டும் காரணமாகக் கொண்டு, நாட்டின் எந்தப் பகுதியிலும் நடைபெறும் சம்பவங்கள் தொடா்பான வழக்குகளையும் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தாா்.

மேலும், சம்பவங்கள் அனைத்தும் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க பிராந்திய அதிகார வரம்பு தில்லி உயா்நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தாா். உரிய நிவாரணம் கோரி சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தை அணுகவும் மனுதாரருக்கு அனுமதி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.