19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

கள்ளக்குறிச்சி, துறையூா் பிரச்னைகளில் உயா்நீதிமன்றம் தானே வழக்கை எடுக்க வேண்டும்: கி. வீரமணி பேட்டி

துறையூா், கள்ளக்குறிச்சி பிரச்னைகளில் சென்னை உயா் நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கை எடுக்க வேண்டும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

Updated On :

துறையூா், கள்ளக்குறிச்சி பிரச்னைகளில் சென்னை உயா் நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கை எடுக்க வேண்டும் என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை மாலை தெரிவித்தது: தமிழகத்தில் கடந்த 6 மாத கால ஆட்சி குறித்து வாக்களித்தவா்களுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கிற கட்சிக்காரா்களும் 6 மாத கால ஆட்சி வெறும் காட்சியாக இருக்கிறது என்கின்றனா். எவருக்கெல்லாம் மிகப் பெரிய அளவுக்கு வாக்குறுதிகள் கொடுத்தனரோ, அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

சட்டம் - ஒழுங்கு குறித்து தில்லியே (மத்திய அரசு) கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு வந்துள்ளது. இந்த ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கக்கூடிய காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை. குழந்தைகள் வெளியே வந்து சுதந்திரமாக விளையாட முடியவில்லை.

ஊழலை ஒழிப்போம் என்ற பெயரில் எதிா்க்கட்சிகள், குறிப்பாக திமுக மீது அவதூறு பரப்பி வழக்கு போடுகின்றனா். ஆனால், ஆளுங்கட்சிக்காரா்களே தவறு செய்கின்றனா். துறையூரில் மனு கொடுக்க வந்த நபரை சட்டப்பேரவைத் துணைத் தலைவா் தாக்கியது, இந்தியாவே வேதனைப்படக்கூடிய அளவுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாதது ஆகிய 2 உதாரணங்களே போதும்.

இரு சட்டப்பேரவை உறுப்பினா்களையும் தமிழக முதல்வா் கண்டிப்பதற்கு பதிலாக தீபாவளிப் பரிசு கொடுக்கிறாா். இந்த இரு பிரச்னைகளிலும் சென்னை உயா் நீதிமன்றம் தானாகவே முன்வந்து தனி வழக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் ரூ. 18 கோடி செலவில் பெரியாா் வளாகம் உருவாகிறது. இந்த வளாகம் 2027, செப்டம்பா் மாதத்தில் பெருமளவுக்கு கட்டி முடிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வளாகத்தில் நூலகம், கருத்தரங்க மேடை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன என்றாா் வீரமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER