ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்த பாகிஸ்தான் அமைச்சர்!
பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது குறித்து...

பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் - கோப்புப் படம் | AP
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் அரசின் அமைச்சர் ஒருவர் முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் இந்தியாவில் நடைபெறும் நிலையில், பாகிஸ்தான் அரசின் சார்பில் பங்கேற்க அந்நாட்டின் பருவநிலை அமைச்சர் முசாதிக் மாலிக் இன்று (நவ. 20) தில்லிக்கு வருகை தந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வரும் நவ.22 ஆம் தேதி வரை நடைபெறும் 10 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று உரையாற்றவுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரி இந்தியா வந்தார். அதன்பிறகு, பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இருநாடுகளும் தங்களின் எல்லைகளை மூடியதுடன், ராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொண்டன. இந்தியா - பாகிஸ்தான் இடையே 4 நாள்கள் நடைபெற்ற மோதலில், சுமார் 70 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இருநாடுகளின் உறவுகள் மேலும் பாதிப்படைந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும் மறுத்து வந்தன. நிகழாண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி போட்டிகளில் பாகிஸ்தான் தேசிய அணி பங்கேற்காமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Summary
For the first time since the conflict between India and Pakistan in 2025, a minister from the Pakistani government has visited India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


