டிரம்ப் உடனான சந்திப்புக்கு புதின் கொண்டு சென்ற அணுஆயுத சூட்கேஸ்!
சீனப் பயணத்தில் ரஷிய அதிபர் புதின் கொண்டு சென்ற அணுஆயுத சூட்கேஸ் குறித்து...

ரஷிய அதிபர் புதினின் பாதுகாவலர் கையில் இருக்கும் “செகெட்” எனப்படும் அணுஆயுத சூட்கேஸ்... - எக்ஸ்
சீனாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்புக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கொண்டு சென்ற அணுஆயுத சூட்கேஸ் பெரும் கவனம் பெற்றுள்ளது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டை ஒட்டி ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் சீனாவின் ஷென்சென் நகரத்துக்கு வருகை தந்தனர்.
இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் முத்தரப்பு சந்திப்புக் கூட்டத்தை இன்று (நவ. 19) நடத்தியுள்ளனர்.
ஈரான் உடனான அமெரிக்காவின் போர் மற்றும் உக்ரைன் உடனான ரஷியாவின் போர் நடைபெற்று வரும் சூழலில், உலகின் மிகப் பெரிய அணு ஆயுத வல்லரசு நாடுகளின் தலைவா்கள் மூவரும் முதல்முறை கூட்டாகச் சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில், சீனாவுக்குச் சென்ற புதினின் பாதுகாவலர்கள், அணுஆயுதத் தாக்குதலுக்கு அதிபர் உத்தரவிடப் பயன்படும் “செகெட்” எனும் சூட்கேஸ் வடிவிலான கட்டுப்பாட்டுக் கருவியைக் கையோடு எடுத்து வரும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இத்துடன், வியத்நாம் நாட்டின் டா நாங் நகரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அணுஆயுதத் திறனுடைய ரஷியாவின் 2 போர் விமானங்களும் அதிபர்களின் முத்தரப்பு சந்திப்புக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்கா-ரஷியா இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டாா்ட்’ கடந்த பிப்ரவரி மாதம் காலாவதியானது.
இதையடுத்து, சீனாவையும் உள்ளடக்கிய புதிய முத்தரப்பு அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
During his visit to China, the 'nuclear briefcase' brought by Russian President Putin for his meetings with President Xi and Trump has drawn significant attention.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


