டிரம்ப் - ஜின்பிங் - புதின் மீண்டும் டிசம்பரில் சந்திப்பு?

டிசம்பர் மாதம் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மீண்டும் சந்திப்பதாகத் தகவல்...

Trump, Xi, Putin

சீனாவில் நடைபெற்ற முத்தரப்பு சந்திப்பில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் - AP

Updated On :

ஜி20 உச்சி மாநாட்டில் அதிபர் டொனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்டோர் மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டை ஒட்டி ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் சீனாவின் ஷென்சென் நகரத்தில் திரண்டனர்.

இந்த மாநாட்டுக்கு இடையே உலகின் மிகப் பெரிய அணு ஆயுத வல்லரசு நாடுகளின் தலைவா்களான டிரம்ப், புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்கா தலைமையில் ஃபுளோரிடா மாகாணத்தின் மியாமி நகரத்தில் வரும் டிசம்பர் 14-15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா அதிபர்கள் மீண்டும் சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் உறுதியாகப் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புதினுக்கு எதிராக விதித்துள்ள பிடிவாரண்ட் உத்தரவினால் அவர் சமீபகாலமாக ஜி20 மாநாடுகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வருகிறார்.

இதனிடையே, ஜி20 மாநாட்டில் பங்கேற்க ஜின்பிங் மற்றும் புதின் ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, அமெரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து பரீசிலித்து வருவதாக, ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

Summary

there is a possibility for President Trump, Chinese President Xi and Russian President Putin to meet again at the G20 summit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.