மணிப்பூரில் கள்ளச்சாராய பலி 16ஆக உயர்வு: 6 பேர் கைது
மணிப்பூரில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை16ஆக உயர்ந்திருப்பது பற்றி....

கோப்புப்படம்.
மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 16 ஆக உயர்ந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுமார் 600 பேர் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் மூன்று மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகளின் உடல்நிலையைக் கண்காணிக்கவும், மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சுகாதாரத் துறை அதிகாரிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்மட்டக் குழுவையும் அரசு அமைத்துள்ளது.
இக்குழு தனது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அரசிடம் சமர்ப்பிக்கும். இதனிடையே அண்டை மாவட்டமான காக்சிங்கில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வரப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Summary
The toll in the suspected spurious liquor tragedy in Manipur’s Chandel district rose to 16 on Saturday, even as six people were arrested by the police in connection with the incident.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


