மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி!
மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலியானது பற்றி...

மணிப்பூர்.
மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம், சண்டேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கருதப்படும் சம்பவத்தில் கடந்த மூன்று நாள்களில் 8 பேர் பலியானதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சாக்பிகாரோங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெத்தனால் நச்சுத்தன்மை காரணமாக இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையின் அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை இருவர், வியாழக்கிழமை ஒருவர் மற்றும் நவம்பர் 18-ஆம் தேதி ஐந்து பேர் என மொத்தம் 8 பேர் பலியாகினர். உயிரிழப்புகளுக்கான துல்லியமான காரணம் இன்னும் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மது மற்றும் சந்தேகத்திற்குரிய மதுபானங்களைத் தவிர்க்குமாறும், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இடங்களிலிருந்து மதுபானங்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் யும்நாம் கெம்சந்த் சிங் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், மாநில சுகாதாரத் துறை மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
Summary
At least eight people have died in three days following suspected consumption of spurious liquor in Manipur's Chandel district, police said on Friday. The suspected methanol poisoning cases have been reported in Chakpikarong sub-division and adjoining areas, with several others undergoing treatment at hospitals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


