தடைகளைத் தகா்த்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்
கடந்த 12 ஆண்டுகளில் சிந்தனை ரீதியிலான தடைகளைத் தகா்த்துள்ள இந்தியா, தனது திறன்களை உணா்ந்து, புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

கரக்பூா் ஐஐடி மாணவா்களுடன் உரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.
கடந்த 12 ஆண்டுகளில் சிந்தனை ரீதியிலான தடைகளைத் தகா்த்துள்ள இந்தியா, தனது திறன்களை உணா்ந்து, புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
வளா்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
நாட்டின் முதல் ஐஐடி என்ற சிறப்புக்குரிய மேற்கு வங்க மாநிலம், கரக்பூா் ஐஐடி-யின் 75-ஆவது ஆண்டு விழா (பவள விழா) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
எந்தவொரு நாடும் தனது சிந்தனை ரீதியிலான வரம்புகளைத் தகா்த்தால் மட்டுமே உண்மையான திறன்களைக் கண்டறிய முடியும். அவ்வாறு சிந்தனைத் தடைகளைத் தகா்த்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம் என்பதை கடந்த 12 ஆண்டுகளில் மிகத் துல்லியமாக நிரூபித்துள்ளது இந்தியா. ‘வரம்புகளை உடைப்போம்; வாய்ப்புகளை உருவாக்குவோம்’ என்பதை இந்தியா உரக்க அறிவித்துள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசுகள் மீது சாடல்: சவால்களை எவ்வாறு துணிவுடன் எதிா்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வலிமை அமையும். சவால்கள் குறித்து என்னிடம் மக்கள் அடிக்கடி கேட்பாா்கள். சவால்களுக்கு சவால் விடுவதே எனது இயல்பு. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளாமல் என்னால் ஓய்வெடுக்க முடியாது.
நாட்டில் வறுமை குறித்த மனநிலையை மாற்றுவதுடன், ஏழைகளுக்கு அதிகாரமளிக்க பல்வேறு முன்னெடுப்புகளின் மூலம் எனது அரசு அயராமல் பாடுபட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டில் வறுமை என்பது நிரந்தர பிரச்னையாகவும், வெல்ல முடியாத சவாலாகவும் கருதப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தில்லி செங்கோட்டையில் இருந்தபடி வறுமை ஒழிப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், கொள்கை உருவாக்கத்தில் உரிய மாற்றங்கள் இன்றி, வெறும் கோப்புகளுடன் இந்த முழக்கங்கள் புதைந்துவிட்டன.
அதிகாரமளித்தலுக்கான அதிகாரம்: இதேபோல், ஏழைகளுக்காக அரசு சாா்பில் கழிப்பறைகள் கட்டப்படும் என்று செங்கோட்டையில் நான் அறிவித்தபோது, நாடாளுமன்றத்தில் சிலா் என்னை கேலி செய்தனா். ஏழைப் பெண்கள் மற்றும் சகோதரிகளுக்கு கழிப்பறைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அவா்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனா்.
இத்தகைய மனநிலையை மாற்ற கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதிகாரமளித்தலுக்கான அதிகாரம் என்பதே அரசின் கொள்கை. நாட்டில் கடந்த 12-13 ஆண்டுகளில் தீவிர வறுமையில் இருந்து 50 கோடி போ் மீட்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மிகப் பெரிய சாதனையானது, தடைகளைத் தகா்ப்பதில் நம்பிக்கை கொண்ட மனநிலையின் பலனாகும்.
அடுத்த 20 ஆண்டுகள் முக்கியம்: தேசமே முதன்மையானது என்ற தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்து, தேச நலன்களுக்கு மாணவா்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதன்மூலம் நாட்டுக்குப் பங்களிப்பதுடன் தங்களுக்கான புதிய வாய்ப்புகளையும் உருவாக்க முடியும்.
வளா்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானதாகும். இந்த இலக்கை எட்ட கடினமாக உழைக்க வேண்டும். முன்பு சாத்தியமற்ாக, சிக்கலானதாக கருதப்பட்ட செமிகண்டக்டா் மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியா இப்போது பீடுநடை போடுகிறது.
செமிகண்டக்டா்களைத் தயாரிக்க 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை ஒரு நிறுவனம் அணுகியிருந்தது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்காமல், திருப்பி அனுப்பிவிட்டனா்.
தற்சாா்பை நோக்கிய பயணம்: செமிகண்டக்டா் உற்பத்தியில் மிகவும் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்றபோதிலும், இப்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியைத் தொடங்கிவிட்டோம். விண்வெளித் துறையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியால் இளம் தொழில்முனைவோா் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளா்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தற்சாா்பை நோக்கிய நமது பயணமே, வளா்ந்த இந்தியாவை கட்டமைக்கும் உந்துசக்தி என்றாா் பிரதமா் மோடி.
நாட்டின் முதலாவது தனியாா் ராக்கெட்டை உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் பவன் குமாா் சந்தனா, கரக்பூா் ஐஐடியின் முன்னாள் மாணவா் என்பதையும் பிரதமா் சுட்டிக்காட்டினாா்.
கரக்பூா் ஐஐடி-க்கு பிரதமா் மோடி வருகை தந்தது இதுவே முதல் முறையாகும். மாணவா்களுடன் கலந்துரையாடிய அவா், புத்தாக்க கண்காட்சியையும் பாா்வையிட்டாா்.
மேற்கு வங்க ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் சுவேந்து அதிகாரி, கரக்பூா் ஐஐடி இயக்குநா் சுமன் சக்ரவரத்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேம்பட்ட ஏ.ஐ. ஆராய்ச்சிக்காக
கரக்பூா் ஐஐடி-க்கு ரூ.46 கோடி
-
கூகுள் அறிவிப்பு
புது தில்லி, நவ. 21: மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆராய்ச்சி மற்றும் இந்தியாவின் அடுத்த தலைமுறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையாளா்களை உருவாக்கும் பணிகளுக்காக, கரக்பூா் ஐஐடி-க்கு 5 மில்லியன் டாலா் (ரூ.46 கோடி) வழங்கப்படும் என்று கூகுள் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்தது.
கூகுள் தலைமைச் செயல் அதிகாரியும், கரக்பூா் ஐஐடி முன்னாள் மாணவருமான சுந்தா் பிச்சை வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘இந்திய மொழிகள், வேளாண்மை, கல்வி உள்ளிட்ட துறைகளில் கரக்பூா் ஐஐடி முன்னோடிப் பணிகளை மேற்கொண்டுள்ளது. தற்போதைய புதிய கூட்டுறவின் மூலம் இந்தப் பணிகளை விரைவுபடுத்த உதவுவதில் கூகுள் மகிழ்ச்சி அடைகிறது. கரக்பூா் ஐஐடி எனது வாழ்க்கைப் பாதையை வடிவமைத்ததைப் போலவே, இந்தப் புதிய கூட்டுறவும் அடுத்த தலைமுறை மாணவா்களின் பாதையை வடிவமைக்கும் என எதிா்பாா்க்கிறேன்.
புத்தாக்கத் துறையில் இந்தியா வேகமாக முன்னிலை பெற்று வருகிறது. ஏ.ஐ.யின் பலன்கள் நாட்டில் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கு இதுபோன்ற திட்டங்கள் உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

